நிகழ்வுகள்

16 ஆவது ஆண்டில் அக்கினிக்குஞ்சு; கோவிலூர் செல்வராஜன் (லண்டன்) வாழ்த்துச் செய்தி

வணக்கம். நான் கோவிலூர் செல்வராஜன் லண்டனிலிருந்து பேசுகின்றேன்.

அக்கினி குஞ்சு இணையத்தளத்தின் 16வது ஆண்டு நிறைவை யொட்டி அதற்கு வாழ்த்து தெரிவிக்கின்றேன். அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் 16வது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் அதற்கு வாழ்த்து கூறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகின்றது.

யாழ் பாஸ்கர் என்றும் அக்கினிகுஞ்சு பாஸ்கர் என்றும் எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் அன்புத் தம்பி பாஸ்கர் பதினாறு ஆண்டுகளாக மிகச் சிறப்பாக இந்த விழாவினை செய்து வருகின்றார். அவருக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.

ஏழு வருடங்களுக்கு முன்பு ஆம் 2019ம் ஆண்டு அக்னிக்குஞ்சு இணையத்தளத்தின் ஒன்பதாவது ஆண்டு விழாவிலே என்னையும் லண்டனிலிருந்து வரவழைத்து இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழுக்குள்ளும் நான் இருந்து சாதனை புரிகின்றேன் என்று பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி என்னை கௌரவித்தது அக்கினி குஞ்சு. அதற்காக நான் என்றும் நன்றி உடையவனாக இருக்கின்றேன்.

அக்கினி குஞ்சு விருது விழாக்களிலே விருது வழங்கும் வைபவத்துடன் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுவது வழமை. அந்த வகையில் அன்றும் யோசுவா சுருதி இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியும் இருந்தது. அன்று அந்த நிகழ்ச்சியிலே சரிகமப முதலாவது டைட்டில் வின்னர் வர்ஷா கிருஷ்ணன் அவர்களும் கலந்து கொண்டார். தங்க மங்கை என்று பெயர் பெற்ற அவர் சிறந்த பாடகி. அவருடன் சேர்ந்து ஒரு சிறப்பு பாடலை பாடும்படி என்னை கேட்டுக் கொண்டார் நிகழ்ச்சித் தயாரிப்பாளர். அவரின் அன்பான வேண்டுதலை நிறைவேற்ற நான் உடனே ஒரு பாடலை எழுதினேன். அது ‘போதைப் பொருளால் உலகம் இருளாய் போய்க்கொண்டிருக்கிறது நாளும் பொழுதும் இளைஞர் வாழ்வு நரகில் கிடக்கிறது”
என்ற பாடல்.

இந்தப் பாடலுக்கு நானே மெட்டுப் போட்டு அதை பாடகி வர்ஷா அவர்களுக்கும் சொல்லிக் கொடுத்து மேடையில் இசைக்குழுவின்ருக்கும் சொல்லிக் கொடுத்து பாடலிலை சிறப்பாக பாடினோம். அந்தப் பாடல் அன்று எல்லோருக்கும் பிடித்தமான பாடலாக அமைந்தது.

அக்கினி குஞ்சு இணையத்தளத்தின் 16 வது ஆண்டு நிகழ்விலும் ஜோஸ்வா ஸ்ருதியின் இசை நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இந்த நிகழ்ச்சியிலும் புதிய ச ரி க ம புகழ் பாடகர்களும் கலந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பிக்கின்றார்கள் அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
மற்றும் இந்த நிகழ்வில் வாழ்நாள் சாதனையாளர் விருதுபெறும் படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

அக்கினி குஞ்சு இணையத்தளம் மென்மேலும் சிறப்பாக செயல்பட்டு இன்னும் பலப்பல ஆண்டுகள் தனது ஆண்டு விழாக்களை கொண்டாட வேண்டும். அதற்கு அன்பு தம்பி பாஸ்கருக்கு ஆண்டவன் அனைத்து நலன்களையும் கொடுக்க வேண்டுமென்று வேண்டி விடை பெறுகின்றேன். நன்றி. வணக்கம்.

கோவிலூர் செல்வராஜன்
லண்டன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button