தமிழக முதல்வராக விஜய் நாளை பதவியேற்கிறார்?; புதிய அரசு பொறுப்பேற்கும் நிலையில் தீவிர ஏற்பாடுகள்

சென்னை: தமிழ்நாட்டில் புதிய அரசு நாளை வியாழக்கிழமை பொறுப்பேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் தலைமைச் செயலர், டி.ஜி.பி மற்றும் முக்கிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பதவியேற்பு விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலர் ஆலோசனை நேற்று நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறைச் செயலர், சென்னை மாநகர காவல் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் மணிவாசன், காவல் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளும் பங்கேற்றனர்
தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனையடுத்து தவெகவின் சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சூழலில், ஆட்சியமைக்க உரிமை கோரி நேற்று முற்பகல் ஆளுநருக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கிடையே, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின். அவர் ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பினார். முதல்வர் ஸ்டாலினின் ராஜினாமாவை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஏற்றுக்கொண்டார். புதிய அரசு அமையும் வரை பதவி வகிக்குமாறு ஸ்டாலினிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
தவெக தலைமையிலான புதிய அரசு அமையவுள்ள நிலையில், பதவியேற்பு விழா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் மணிவாசன், காவல்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
மே 8 ஆம் திகதிக்கு முன்பாக புதிய அரசு பதவியேற்க வேண்டும். அதனால் மே 7 ஆம் திகதி தமிழக முதல்வராக விஜய் பதவியேற்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்பு விழாவை கலைவாணர் அரங்கு அல்லது நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
![]()