பலதும் பத்தும்

ஓமந்தையில் திருவள்ளுவர் சிலை திறப்பு..!

வவுனியா – ஓமந்தை கிராம அலுவலர் வளாகத்தினுள்  திருவள்ளுவர் சிலை ஒன்று  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மாங்குளம் கிராம அலுவலர் நாகராஜா தலைமையில் இடம்பெற்ற  நிகழ்வில் முதன்மை அதிதியாக வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன் கலந்துகொண்டு சிலையை திறந்து வைத்தார்.

அன்னம்மா அறக்கட்டளையின் 10 ஆவது ஆண்டை முன்னிட்டு  அதன் ஸ்தாபகர் அருட்பணி சிற்றம்பலம் கமலகண்ணன் அவர்களால் சிலை நிறுவப்பட்டது.

நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளர் கு.பாலசண்குகன், தெற்கு பிரதேசசபையின் செயலாளர் சு.தெர்ஜனா, ஓமந்தை மத்தியகல்லூரி அதிபர் செ.பவேந்திரன், பாடசாலை மாணவர்கள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button