இலங்கை

விரைவில் கைது செய்யப்படவுள்ள ராஜபக்ச குடும்ப உறுப்பினர்! விசாரணையில் திணறிய ஷிரந்தி

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கொழும்பு, 260/17 டொரிங்டன் மாவத்தையில் அமைந்துள்ள ரூ. 400 மில்லியன் மதிப்புள்ள மாளிகை குறித்து தற்போது ஒரு பெரும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இது கொழும்பின் மையப்பகுதியில் உள்ள மற்றுமொரு சொத்து மட்டுமல்ல. இந்த வீடு, ஒரு காலத்தில் யோஷித ராஜபக்சவுக்குச் சொந்தமானது என்று கூறப்பட்ட சர்ச்சைக்குரிய சி.எஸ்.என் தொலைக்காட்சி அலைவரிசையின் உத்தியோகபூர்வ பதிவுத் தலைமையகமாகவும் இருந்தது.

அரசியல் களத்தில் இதுவரை கேள்விப்படாத பெயரான “மேரி லௌட்ஸ் விக்ரமசிங்க” என்பவரால் சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன்பு இந்தச் சொத்து வாங்கப்பட்டிருந்தாக கூறப்படுகின்றது.

உண்மையில் இது முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவின் பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மையான பெயராகும்.

இவ்வளவு பெரிய செல்வத்தை எவ்வாறு பெற்றார் என்பது குறித்து இலஞ்ச ஆணைக்குழு எழுப்பியுள்ள கேள்விகளுக்கு ஷிரந்தி ராஜபக்சவிடமிருந்து இதுவரை முறையான விளக்கம் எதுவும் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது.

விரைவில் ராஜபக்ச குடும்ப உறுப்பினரொருவர் கைது செய்யப்படவுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button