நிகழ்வுகள்

நீண்டநாள் நீநிலைக்க நெஞ்சார வாழ்த்துகிறேன்!…. ஜெயராமசர்மா (அவுஸ்திரேலியா) வாழ்த்துச் செய்தி

ஆண்டு பதினாறில் அடிபதிக்கும் அக்கினிக்குஞ்சே
நீண்டநாள் நீநிலைக்க நெஞ்சார வாழ்த்துகிறேன்
ஆண்டாண்டு தோறும் அகமகிழ விழாவெடுத்து
அரும்விருது கொடுப்பதனை அகமார வாழ்த்துகிறேன்

தேர்ந்தெடுத்து தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி
தேமதுரத்தமிழ் படைப்பார் அரங்கேற்றி மகிழுகிறாய்
இசைபருக வைக்கின்றாய் இளையவரை ஏந்துகிறாய்
வளமாக நீவளர மனமார வாழ்த்துகிறேன்

என்னேரமும் இயங்கி எமக்குப்பல தருகின்றாய்
முத்தமிழை முத்தமிட்டு தித்திக்கத் தருகின்றாய்
எத்திசையில் உள்ளாரும் ஒத்திருக்கக் கொடுக்கின்றாய்
எப்பொழுதும் நீயுர இதயத்தால் வாழ்த்துகிறேன்

பாஸ்கரின் ஆளுமையும் பாஸ்கரின் பேருழைப்பும்
அக்கினிக் குஞ்சேயுன் ஆணிவேர் ஆகிறது
ஆல்போல நீயும் வளர்ந்தோங்க வேண்டும்
அன்னைத் தமிழாலே வாழ்த்தி மகிழ்கின்றேன் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button