பலதும் பத்தும்

ஒரு சதுர மீட்டருக்கு ஒரு பாம்பு! இப்படி ஒரு பாம்புத் தீவு!

பிரேசில் நாட்டின் அட்லாண்டிக் பெருங்கடலில் சாவோ பாலோவுக்கு வடக்கே கடற்கரையிலிருந்து சுமார் 93 மைல்கள் தொலைவில் உள்ளது ‘இல்ஹா டா குயிமாடா கிராண்டே’ என்னும் பாம்பு தீவு.

உலகின் சில பகுதிகள் மனிதர்கள் வசிக்க முடியாத இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் பிரேசில் நாட்டின் அட்லாண்டிக் பெருங்கடலில் சாவோ பாலோவுக்கு வடக்கே கடற்கரையிலிருந்து சுமார் 93 மைல்கள் தொலைவில் உள்ளது ‘இல்ஹா டா குயிமாடா கிராண்டே’ என்னும் பாம்பு தீவு என அழைக்கப்படும் ஒரு தீவு. இந்த தீவு உலகின் மிக ஆபத்தான இடங்களில் ஒன்றாகவும், ஆபத்தான விஷ பாம்புகளுக்கும் பெயர் பெற்றது. இந்த தீவில் கோல்டன் லான்ஸ்ஹெட் (போத்ராப்ஸ் இன்சுலாரிஸ்) என்ற விஷ பாம்புகள் அதிகம் காணப்படுவதால், இது “பாம்பு தீவு” என்றும் “மரணத் தீவு” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தீவில் சுமார் 4,000 பாம்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித தலையீடு இல்லாததால் பாம்புகள் தீவில் சிறப்பாக இனப்பெருக்கம் செய்ய முடிந்தது. சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் கூர்மையாக உயர்ந்தது.

இதனால் பொதுமக்கள் இந்த பாம்பு தீவுக்கு செல்ல 1920-ம் ஆண்டில் இருந்தே பிரேசில் நாடு தடை விதித்துள்ளது. இந்த பாம்புகளை வேட்டையாட சரியான எதிர் வேட்டையாடி உயிரினங்கள் இந்த தீவில் இல்லாததால் தங்க ஈட்டி முனை தலை பாம்புகள் ஆயிரக்கணக்கில் பெருகி விட்டன. இங்கு 1909-ம் ஆண்டு ஒரு கலங்கரை விளக்கம் ராணுவத்தால் கட்டப்பட்டது. இதை பராமரிக்க ஒரு சிலர் பாம்புத்தீவில் வசித்து வந்ததாகவும், இவர்கள் பாம்பு கடியால் இறந்து போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கலங்கரை விளக்கம் தானியங்கி மயமாக்கப்பட்டு விட்டது.

அழகான காடு நிறைந்த இந்த தீவில் வாழும் தங்க ஈட்டி முனை தலை பாம்புகளை அரிதான இனமாக பாதுகாக்கிறது பிரேசில் நாடு. இந்த தீவுக்கு யாரும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

மேலும் பிரேசில் அரசாங்கத்தால் இது பாதுகாக்கப்பட்ட இடமாக உள்ளது. பிரேசிலிய கடற்படையின் வருடாந்திர பராமரிப்பு வருகை மற்றும் ஒரு சில ஆராய்ச்சி பயணங்களைத் தவிர, யாரும் தீவிற்குள் சட்டப்பூர்வமாக நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button