முத்தம் பற்றி இதுவரை அறிந்திராத சுவாரஸ்ய விஷயங்கள்..
அதீத அன்பை வெளிப்படுத்த ஒவ்வொரு மனிதரும் பயன்படுத்தும் உத்திதான் முத்தம். அதிலும் நாம் நம் வாழ்க்கை துணைக்கு கொடுக்கும் முத்ததில் வெறும் அன்பு மட்டும் இருக்காது. அதில் காதல், காமம் இவை அனைத்தும் அடங்கிருக்கும்.
உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பதால் பல நன்மைகளும் கிடைப்பதாக பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்போது முத்தத்தை பற்றி இதுவரை அறிந்திராத 5 விஷயங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
1) முத்தம் கொடுக்கும் போது, வாய் வழியாக பரிமாறிக் கொள்ளப்படும் ஒரு வகை பாக்டீரியாவால் பற்சிதைவு உண்டாவது தடுக்கப் படுகின்றதாம்.
2) மன அழுத்தத்தை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் முத்தங்கள் பயன்படுகின்றதாம்.
3) முத்தங்கள் பற்றிய அறிவியல் படிப்பிற்கு Philematology என்று பெயர்.
4) குழந்தைகளுக்கு காதுகளில் கொடுக்கப்படும் முத்தத்தால் அவர்களின் செவிப்பறையில் காற்றழுத்தம் ஏற்பட்டு செவிட்டுத்தன்மை உண்டாக வாய்ப்பு உள்ளதாம்.
5) முத்தம் கொடுக்கும்போது முகத்தில் உள்ள 32 தசைகளும் வேலை செய்வதால், முகச்சுருக்கங்கள் உண்டாகும் பாதிப்பு குறைகிறதாம்.