சபையின் நடுவில் அர்ச்சுனாவுக்கு ஆசனம்

எதிர்க்கட்சியில் அமர தனக்கு விருப்பமில்லை என்பதனால் சபையின் நடுவில் தனக்கு ஆசனம் தருமாறு சுயேச்சைக்குழு 17 இன் யாழ் மாவட்ட எம்.பி.யான இராமநாதன் அர்ச்சுனா சபாபடத்திடம் கோரினார்
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான 2 ஆம் நாள் விவாதத்தின்போது சபை முதல்வரான பிமல் ரத்னாயக்க,எதிர்க்கட்சி எம்.பி.யான அர்ச்சுனாவை எம்முடன் தொடர்புபடுத்தி எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவிக்கின்றனர். அவர் கிண்ணியாவில் எமது மேடையில் ஏறவில்லை .உங்கள் மேடையில்தான் ஏறினார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைப் பார்த்து கூறினார்.
அப்போது எழுந்த அர்ச்சுனா எம்.பி. என்னை வருமாறு அழைத்த குரல் பதிவு என்னிடம் உள்ளது. எனக்கு எதிர்கட்சிப் பக்கத்தில் அமர விருப்பம் இல்லை. எனவே எனக்கு சபையின் நடுவே ஆசனம் ஒன்றைப் போட்டுத் தாருங்கள் என சபாபீடத்திடம் கோரினார்.