தேசிய பட்டியல் எம்.பி. ஆகினார் மனோ
நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்ற 5 தேசியப் பட்டியல் உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர் பதவி ஏற்கனவே அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், எஞ்சியுள்ள 4 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளவர்களது பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.
இந்த பட்டியலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பட்டியலில் நியமிக்கப்பட்டுள்ள நான்கு உறுப்பினர்களது பெயர் விபரம் வருமாறு,
1.மனோகணேசன்
2.நிசாம் காரியப்பர்
3.சுஜீவ சேனசிங்க
4.மொஹமட் இஸ்மாயில்
இந்த நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயரின்றி ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்புவதை தடுத்து இடைக்கால தடையுத்தரவு இன்று பிற்பகல் பிறப்பிக்கப்பட்டது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.