2025 சனிப் பெயர்ச்சி: இந்த ராசியினருக்கு சோதனை தான்
கிரகங்கள் ராசியை மாற்றும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கம் செலுத்தும்.
சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை வருடங்கள் வரையில் பயணம் செய்வார்.
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டில் சனி பகவான் தனது சொந்த ராசியில் பயணத்தை முடித்துக்கொண்டு மீன ராசிக்குச் செல்லவுள்ளார்.
இச் சனிப் பெயர்ச்சி அடுத்த வருடம் மார்ச் 29 ஆம் திகதி நிகழவுள்ளது.
இச் சனிப்பெயர்ச்சியால் எந்தெந்த ராசியினர் பிரச்சினையை அனுபவிப்பார் எனப் பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் செல்லவுள்ளார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்படும். வருமானம் குறையும். குடும்பத்தினரிடையே மனக் கசப்புக்கள் ஏற்படும். நிதி இழப்புக்கள் அதிகமாகும்.
கடகம்
கடகத்தின் 9 ஆவது வீட்டுக்கு சனி பகவான் செல்லவுள்ளார். இதனால் நிதி இழப்பு அதிகமாக ஏற்படும். பல சிரமங்கள் மற்றும் சவால்களை சந்திக்க நேரிடும்.
கும்பம்
கும்பத்தின் 2 ஆவது வீட்டிற்கு சனி செல்வதால் பல சோதனைகளை சந்திப்பர். தேவையற்ற செலவுகள் ஏற்படும். உடன் வேலை செய்பவர்களுடன் நிறைய பிரச்சினைகள் ஏற்படும். வாக்குவாதங்கள் ஏற்படும்.