விபச்சார விடுதில வளர்ந்த இந்தியாவின் முதல் கோடீஸ்வர பாடகி
கிராமபோன்கள் பொதுமக்களின் நினைவிலிருந்து கிட்டதட்ட முற்றிலுமாக மறைந்து விட்டது, குறிப்பாக இந்த தலைமுறையினருக்கு அதனைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் இசை உலகில் அவற்றை யாராலும் மறந்து விடமுடியாது. இசை பெரும்பாலும் தாசிகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட ஒரு காலத்தில், ஒரு பாடகி ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசை, தும்ரி, தாத்ரா மற்றும் கஜ்ரி ஆகியவற்றில் தனது அபார திறமையின் மூலம் புகழ் பெற்றார்.
கோடீஸ்வர இந்தியராக அறியப்பட்டஅவர், கிராமபோன் நிறுவனத்துடனான அவரது முதல் பதிவு, இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட முதல் பாடலாக இருந்தது. அவரது தொழிலில் சமூக இழிவுகள் இருந்தபோதிலும், அவர் அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமான மற்றும் அனைவராலும் விரும்பப்பட்ட கலைஞர்களில் ஒருவராக விளங்கினார், இசை மூலம் அளவிலா செல்வத்தை சம்பாதித்து, இந்தியாவின் முதல் இசைப்பதிவு கலைஞராகவும், ஆரம்பகால இசை சூப்பர் ஸ்டாராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவர்தான் இசையின் சூப்பர் ஸ்டார் ஏஞ்சலின் யோவார்ட், அவருடைய மேடைப் பெயர் கவுஹர் ஜான்.
கௌஹர் ஜான் இந்திய இசை வரலாற்றில் மிகவும் முக்கியமானவர் மற்றும் பிரபலமானவர். 1902 இல் ஒரு பாடலைப் பதிவு செய்த முதல் இந்தியப் பாடகி அவர். கௌஹர் ஜான் ஒரு பிரிட்டிஷ் தந்தை மற்றும் இந்தியத் தாய்க்கு பிறந்தார், மேலும் அவரது பெற்றோர் பிரிந்த பிறகு, அவரும் அவரது தாயும் இஸ்லாத்திற்கு மாறினார்கள், அதன்பின் கௌஹருக்கு பாரம்பரிய இசை மற்றும் நடனத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
அவரது வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது, இந்திய சமுதாயத்தில் தாசிகளின் போராட்டங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட இசையை நோக்கிய குறிப்பிடத்தக்க மாற்றம் ஆகிய இரண்டையும் பிரதிபலிக்கிறது, இது இறுதியில் இந்திய இசைத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியது. இவர்ஒரு ஆர்மீனிய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார், அது கலை சார்புகளைக் கொண்ட குடும்பமாகும். அவர் நன்கு பயிற்சி பெற்ற இந்தியப் பாடகி மற்றும் நடனக் கலைஞரான விக்டோரியா ஹெமிங்ஸ் மற்றும் ஆஸம்கரில் உள்ள உலர் ஐஸ் தொழிற்சாலையில் பொறியாளராக பணிபுரியும் வில்லியம் ராபர்ட் யோவர்ட் ஆகியோரின் மகள் ஆவார்.
ஆனால் வில்லியம் தனது மனைவியின் பாடும் வாழ்க்கையை ஏற்கவில்லை, கௌஹர் குழந்தையாக இருந்தபோது இருவரையும் கைவிட்டார்.அதன்பின் அவர் ஒரு விபச்சார விடுதியில் வளர்ந்தார் மற்றும் தாசிகளுடன் தனது குழந்தைப் பருவத்தை கழித்தார், அங்கு அவர் பாடல் மற்றும் நடனம் கற்றுக்கொண்டார். அவரது தாயார் மல்கா ஜான் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார் மற்றும் ஒரு பிரபலமான தாசி ஆனார், விரைவில் கௌஹர் அவரது தாயாரை பின்பற்றினார்.
கௌஹர் சிறுவயதிலேயே பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார், மேலும் அந்த துஷ்பிரயோகத்தில் இருந்து தன்னுடைய மனஉறுதியால் வெளிவந்து இந்தியாவின் மிக முக்கிய பிரபலமானார். 1902 மற்றும் 1920 க்கு இடையில், கௌஹர் ஜான் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 600 பாடல்களைப் பதிவு செய்தார். அந்த காலத்தில் ஒரு பாடலுக்கு 3000 ரூபாய் சம்பளமாக வாங்கினார். கௌஹர் ராஜாக்களால் அழைக்கப்படும் இடங்களுக்கு தனது தனிப்பட்ட ரயிலில் பயணம் செய்தார்.
1930 இல், அவர் கோடீஸ்வர பாடகியாக 1 கோடி ரூபாயுடன் இருந்தார். இறுதியாக அவர் மைசூரில் இறந்தார், அங்கு அவர் கிருஷ்ண ராஜா வாடியார் IV ஆல் ‘அரண்மனை இசைக்கலைஞராக’ நியமிக்கப்பட்டார். கௌஹர் ஜான் பற்றிய சில சுவாரசியமா தகவல்களை மேற்கொண்டு பார்க்கலாம். 1887 ஆம் ஆண்டில், கௌஹர் தர்பங்கா ராஜின் (இன்றைய பீகார்) அரச நீதிமன்றங்களில் ஒரு கலைஞராக அறிமுகமானார், மேலும் வாரணாசியில் நடனம் மற்றும் இசையில் விரிவான தொழில்முறை பயிற்சியைத் தொடர்ந்து, அவர் நீதிமன்ற இசைக்கலைஞராக நியமிக்கப்பட்டார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தனது இசைப் பயணம் ஆரம்பத்தில் தொடங்கிய நகரத்திலேயே நிகழ்ச்சியைத் தொடங்கினார், மேலும் அவரது பதிவுகளில் ‘முதல் நடனப் பெண்’ என்று அறியப்பட்டார்.
அதன்பின்னர் அவரது புகழ் படிப்படியாக நாடு முழுவதும் பரவியது, மேலும் அவர் 1910 இல் விக்டோரியா பப்ளிக் ஹாலில் நிகழ்ச்சிக்காக சென்னைக்கு வந்தபோது, அவரது ஹிந்துஸ்தானி மற்றும் உருது பாடல்கள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன, அவை விரைவில் தமிழ் இசை புத்தகங்களில் வெளியிடப்பட்டன. ஒரு வருடம் கழித்து, டெல்லி தர்பாரில் நடந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க அவர் அழைக்கப்பட்டார், அங்கு அவர் அலகாபாத்தைச் சேர்ந்த ஜான்கி பாயுடன் டூயட் பாடலாக ‘யே ஹை தாஜ்போஷி கா ஜல்சா, முபாரக் ஹோ முபாரக் ஹோ’ என்ற பாடலைப் பாடினார்.
கௌஹர் ஜான் பெங்காலி, ஹிந்துஸ்தானி, குஜராத்தி, தமிழ், மராத்தி, அரபு, பாரசீகம், புஷ்டோ, பிரஞ்சு மற்றும் ஆங்கிலம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடல்கள் பாடினார். அவரது அனைத்து நிகழ்ச்சிகளிலும் இருந்த சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், அவர் எப்போதும் ‘மை நேம் இஸ் கௌஹர் ஜான்’ என்று கூறியே நிகழ்ச்சியை முடிப்பார்.