இஸ்ரேல்மீது தாக்குதல்: உத்தரவு அலி கமேனி
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 1ஆம் திகதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் 200 ஏவுகணைகளை வீசியது. இதற்கு பதிலடியாக கடந்த 26ஆம் திகதி இஸ்ரேலின் 100 போர் விமானங்கள் ஈரானின் 20 ராணுவ தளங்கள் மீது குண்டுகளை வீசின.
அன்றைய தினம் ஈரானின் ஆயுத கிடங்குகள், ஆயுத உற்பத்தி ஆலைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் நாட்டின் ஜனாதிபதியாக மசூத் பெசேஷ்கியன் பதவி வகிக்கிறார். எனினும் அந்த நாட்டு மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி, பிரதமரைவிட உயர்ந்தவராக கருதப்படுகிறார். வெளியுறவு கொள்கை தொடர்பான முக்கிய முடிவுகளை அவரே எடுக்கிறார்.
இந்த சூழலில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் ராணுவத்துக்கு கமேனி உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5-ம் திகதி நடைபெறுகிறது. அதற்கு முன்பாக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மீது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஈரான் இராணுவத்துக்கு பதிலாக அதன் பினாமிகளான ஹிஸ்புல்லா, ஹமாஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் மூலம் தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈரானின் எத்தகைய தாக்குதலையும் முறியடிக்கும் வலிமை எங்களுக்கு உள்ளது. அண்மையில் அமெரிக்காவின் தாட் ஏவுகணை தடுப்பு சாதனம் இஸ்ரேலில் நிறுவப்பட்டு உள்ளது.
அதோடு எங்களது வான் வழி தடுப்புகள் மூலம் எதிரிகளின் ஏவுகணைகளை நடுவானில் தடுத்து அழிப்போம். ஈரான் போர் விமானங்கள் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்தால் சுட்டு வீழ்த்துவோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.