74 ஆண்டுகளின் பின் டெல்லியில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவு!
1951 ஆம் ஆண்டிற்குப் பின்னர் புது டெல்லியின், சப்தர்ஜங்கில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை கடந்த ஒக்டோபர் மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 2024 ஒக்டோபரில் அதிகபட்ச வெப்பநிலை 35.1 டிகிரி செல்சியஸை எட்டியது.
அதே நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 21.2 டிகிரி செல்சியஸாக பதிவானதாக இந்திய வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 1951 ஒக்டோபரில் டெல்லியின் அதிகபட்ச சராசரி வெப்ப நிலை 36.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியது.
1907 இல், அதிகபட்ச வெப்பநிலை 35.5 டிகிரி செல்சியஸ் ஆகவும், 1930 இல் அதிகபட்ச வெப்பநிலை 35.0 டிகிரி செல்சியஸ் ஆகவும், 1938 இல் 35.0 டிகிரி செல்சியஸ் ஆகவும், 1941 இல் 35.8 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில் 2024 ஒக்டோபரில் குறிப்பிடத்தக்க வெப்பநிலை உயர்வு காலநிலை விஞ்ஞானிகளிடையே கவலைகளை எழுப்பியுள்ளது.
இந்த வெப்ப அதிகரிப்பு, அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பது மட்டுமன்றி மாறிவரும் காலநிலை குறித்த எச்சரிக்கையாகவும் விளங்குவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.