பறக்கும் ஏயர் டெக்ஸி பெங்களூரில் அறிமுகம்
பெங்களூரின் இந்திரா நகரிலிருந்து விமான நிலையத்துக்கு வருவதற்கு 40 கிலோமீட்டர் ஆகும்.
வீதியினூடாக சென்றால் சரியாக ஒன்றரை மணித்தியாலம் ஆகும். மேலும் இந்திய மதிப்பின்படி, ரூபாய் 2500 ஆகிறது.
இதற்கு மாற்றுவழியாக 40 கிலோமீட்டரை வெறும் 5 நிமிடத்தில் கடப்பதற்காக பறக்கும் ஏயர் டெக்ஸி பெங்களூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான கட்டணம் இந்திய மதிப்பின்படி ரூபாய் 1700 ஆகும்.
பெங்களூர் இந்திரா நகர் பகுதியிலிருந்து விமான நிலையத்துக்கு பயணிகளை அழைத்து வர சரளா ஏவியேஷன் என்ற நிறுவனத்துடன் BIAL கைகோர்த்துள்ளது.
இந்த டெக்ஸியானது சுத்தமான ஆற்றல், பூஜ்ஜிய உமிழ்வு, குறைவான சத்தம் போன்றவற்றால் இயக்கப்படுகிறது.
இந்த டெக்ஸி மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும். ஒரு தடவை சார்ஜ் செய்தால் போதும் 160 கிலோமீட்டர் தூரம் பறக்கும்.
ஒரு தடவை 7 பயணிகள் இந்த ஏயர் டெக்ஸியில் பயணிக்கலாம்.