அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சட்ட விரோதமாக வாக்களிப்பு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்ததாக கூறப்படும் சீன நாட்டு மாணவர் ஒருவர் வாக்காளர் மோசடி மற்றும் பொய்ச் சாட்சியக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
19 வயதான இந்த மாணவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் படித்து வருவதாக கூறப்படுகின்றது. அவர் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு அனுமதி பெற்றுள்ள போதிலும் குடியுரிமை பெற்றிருக்கவில்லை.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சாவடியில் பதிவு செய்ய பல்கலைக்கழக அடையாள அட்மை மற்றும் பிற ஆவணங்களைப் பயன்படுத்திய வாக்களித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமா அல்லது தேர்தல் தலையீட்டிற்கான முயற்சியின் என்ற கோணத்தில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், வாக்களித்த பின்னர், மாணவர் உள்ளூர் தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தனது வாக்கை மீட்டெடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
“இதனிடையே, நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசாரணையில், குடிமக்கள் அல்லாதவர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க பதிவு செய்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்ட விரோதமாக வாக்களித்ததாக ஒரு குற்றச்சாட்டும், பொய்ச் சாட்சியம் அளித்ததாக ஒரு குற்றச்சாட்டும் மாணவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளதாக சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
குடிமக்கள் அல்லாதவர்கள் வாக்களிப்பது மிகவும் அரிதானது மற்றும் பொதுவாக உடனடியாக கண்டறியப்படும் என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.