மயோனைஸிற்கு திடீர் தடை!
மயோனைஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் தெலங்கானாவில் மயோனைஸ் பயன்பாட்டுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முட்டையின் வெள்ளை கருவுடன் எண்ணெய் சேர்த்து உருவாக்கப்படும் உணவு பொருள் மயோனைஸ். இது தற்போது சைவப் பிரியர்களுக்காக முட்டை கலக்காமலும் செய்யப்படுகிறது.
மோமோஸ், ஷவர்மா, செண்ட்விச், பிரெட் ஒம்லெட் போன்ற உணவுப் பொருட்களில் இந்த மயோனைஸ் வைத்து சாப்பிடுவது வழக்கமாக உள்ளது.
இளையதலைமுறையினர் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுகளின் பட்டியலில் மயோனைசும் இடம் பிடித்துள்ளது.
இதனிடையே, சமீபத்தில் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் மயோனைஸுடன் மோமோஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 15 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், மயோனைஸால் பொதுமக்கள் உடல்நலம் பாதிக்கப்படும் சில நிகழ்வுகளும் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, முட்டைகளை கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸை தடை செய்யுமாறு தெலங்கானா அரசுக்கு உணவு பாதுகாப்புத் துறை பரிசீலித்தது.
இதனையடுத்து முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைசுக்கு ஓராண்டு காலம் தடை விதித்து தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.