ரோஹிதவின் மருமகனின் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட அதிசொகுசு வாகனங்கள்
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 6 கோடி ரூபாய் பெறுமதியான அதிசொகுசு ஜீப் வண்டி மற்றும் கார் ஒன்று முன்னாள் துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனுக்கு சொந்தமான கண்டி அனிவத்த பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைத்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குறித்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த இரண்டு அதிசொகுசு வாகனங்களினதும் சட்ட ரீதியான உரிமை தொடர்பிலான விசாரணைகளில் உரிமையை நிரூபிக்க முடியாமையினால் அவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் சுமார் 6 கோடி பெறுமதியுடைய அதிசொகுசு பி.எம்.டபள்யூ ரக கார் ஒன்று மற்றும் ப்ராடோ ரக ஜீப் வண்டியும் உள்ளடங்குகின்றது.
கண்டி மஹய்யாவ பிரதேசத்தில் வாகன விற்பனை நிலையமொன்றுக்கு உரிமையாளரான ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன், அரச உயர் பதவியில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, இந்த இரு வாகனங்களும் சட்ட விரோதமாக நாட்டினுள் கொண்டுவரப்பட்டவையா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாக தெரவிக்கப்படுகிறது.
அதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.