பிரித்தானியர் ஒருவரின் உடலில் 3 ஆண்குறிகள் கண்டுபிடிப்பு
மருத்துவ அதிசயமாக பிரித்தானியாவை சேர்ந்த மனிதர் ஒருவருக்கு உடலில் 3 ஆண்குறி உறுப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் ஆச்சரியம்
78 வயதான பிரித்தானியர் ஒருவர் தன்னுடைய உடலை பர்மிங்காம் பல்கலைக்கழக மருத்துவ பள்ளிக்கு ஆராய்ச்சிக்காக தானம் செய்துள்ளார்.
அவரது மரணத்திற்குப் பிறகு அவரது உடலை ஆராய்ச்சியாளர்கள் பிரேத பரிசோதனை செய்தபோது அதிர்ச்சியளிக்கும் விதமாக அந்த மனிதருக்கு 3 ஆண்குறி உறுப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இயல்பான மனிதர்களை போல வெளிப்புறம் ஒரு ஆண்குறி மட்டுமே இருந்துள்ளது, ஆனால் அவரது மரணத்திற்கு பிறகு செய்யப்பட்ட ஆழமான பிரேத பரிசோதனையின் போது அவரது இடுப்பில் உள்ள இரண்டு கூடுதல் ஆண்குறிகள் கண்டறியப்பட்டன.
இயல்பான மனிதர்களை போல வெளிப்புறம் ஒரு ஆண்குறி மட்டுமே இருந்துள்ளது, ஆனால் அவரது மரணத்திற்கு பிறகு செய்யப்பட்ட ஆழமான பிரேத பரிசோதனையின் போது அவரது இடுப்பில் உள்ள இரண்டு கூடுதல் ஆண்குறிகள் கண்டறியப்பட்டன. இது மிகவும் அரிதானது மட்டுமில்லாமல் மருத்துவ வரலாற்றில் இது முதல் முறையாக பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கண்டுபிடிப்பை பர்மிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ வழக்கு அறிக்கைகள் இதழில் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையில் விவரித்துள்ளனர்.
அதில், கரு வளர்ச்சியின் போது ஏற்பட்ட மரபணு அசாதாரணத்தால் இந்த கூடுதல் ஆண்குறிகள் உருவாகியிருக்கலாம் என்று அவர்கள் விளக்கியுள்ளனர்.
மூன்று ஆண்குறிகள் கொண்ட நபர் தனது இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து இருந்தாலும், அவரது அசாதாரண உடற்கட்டமைப்பு சிறுநீர்ப்பை தொற்று, மலட்டுத்தன்மை அல்லது ஆண்குறி செயலிழப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஆனால், இவற்றில் ஏதேனும் அவருக்கு ஏற்பட்டதா என்பது தெளிவாக இல்லை.