ஆங்காங்கே இன்று கிராமங்களில் ஒரு பக்கம் மூப்பால்
விவசாய தொழிலை முடித்துக் கொண்டனர், ஒரு பக்கம் வாரிசுகள் ஏதும் இறங்க முன்வரவில்லையென முடித்துக் கொண்டனர், ஒரு பக்கம் முன்பு போல் ஆட்கள் கிடைக்கவில்லையென முடித்துக் கொண்டனர், ஒரு பக்கம் போட்ட பணத்தை எடுக்க முடியவில்லையென முடித்துக் கொண்டனர், ஒரு பக்கம் நிலக்கூறு வியாபாரங்களின் அழுத்தமென முடித்துக் கொண்டனர், ஒரு பக்கம் சாலை விரிவாக்க அபகரிப்பென முடித்துக் கொண்டனர், ஒரு பக்கம் மருத்துவ செலவுக்கென முடித்துக் கொண்டனர், ஒரு பக்கம் கடன், வட்டி என முடித்துக் கொண்டனர்.
விவசாயத்தை காப்பதெல்லாம் பிறகு இருக்கட்டும் நாடு முதலில் விவசாயம் செய்யும் அந்த விவசாயியை காக்க முன்வர வேண்டும் பின் விவசாயம் தானே அதுவே நாடெங்கும் தானே வளரும் விவசாயம் என்பது கல்வி பாடமல்ல, அது ஒரு அனுபவ பாடம், காத்தாடி கீழ் அமர்ந்துகொண்டு, தொடுதிரை பயன்படுத்திக் கொண்டு, இரு இட்லி, ஒரு தோசையை ஆகாரமாய் எடுத்துக் கொண்டு இன்று விவசாயம் பயலும் எத்தனை மாணவர்களுக்கு நாளை வெயில், புயலை எதிர்த்து விளைநிலத்தில் இறங்கி உழவு செய்ய போராடும் உடல் தகுதி இருக்குமென்பது அந்த காலத்திற்கு தான் வெளிச்சம் இயந்திரங்களால் மனித பங்கில்லாமல் முடிக்க இயலாத எத்தனையோ நிலைகள் விவசாயத்தில் உண்டு.
நேரம் இருக்கும் பட்சத்தில் தங்கள் கிராமங்களில் உள்ள ஏதேனும் ஐந்து விவசாயிகளிடம் ஐந்து நிமிடங்கள் பேசி பாருங்கள் நாளைய உலக போர் எதற்கான உலக போர் என ஒரே மாதிரியான பதில்கள் வந்து கொட்டும் வரவிருக்கும் அடுத்த 50 வருட உலக பங்குச் சந்தை வர்த்தகத்தில்
ஒரு நகை பவுன் இருபதாயிரம்யென இறங்கும் ஒரு மூட்டை அரிசி இருபதாயிரம்யென உயரும் நாடும், திட்டங்களும் எஞ்சியிருக்கும் இன்றைய விவசாயிகளை பாதுகாத்தால் கூட போதும் குறைந்தபட்சம் இன்னுமொரு இரு தலைமுறையாவது விவசாயத்தால் உயிர் வாழும் ஒரு வாய்ப்பாவது அவர்களுக்கு ஏதேனும் கிடைக்கும்.