அமெரிக்க சட்ட வழக்குகளைத் தீர்க்க $2.2 பில்லியனை செலுத்த ஒப்புக் கொண்ட பிரிட்டன் மருந்து நிறுவனம்
பிரிட்டன் மருந்து தயாரிப்பு நிறுவனமான GSK, அதன் நெஞ்செரிச்சல் மருந்தான Zantac க்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வழக்குகளை தீர்ப்பதற்கு 2.2 பில்லியன் டொலர்களை (£1.68bn) செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது.
சுமார் 80,000 உரிமைகோருபவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 சட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை எட்டியுள்ளதாக நிறுவனம் அறிவித்தது.
Zantac இன் புற்றுநோய் அபாயத்தை மறைத்து மருந்து தயாரிப்பாளர் அமெரிக்க அரசாங்கத்தை ஏமாற்றியதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
எனினும், எந்த ஒரு விடயத்திலும் GSK குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
Zantac முதன்முதலில் 1983 இல் அமெரிக்காவில் விற்பனைக்கு அங்கீகரிக்கப்பட்டது.
ஐந்தாண்டுகளுக்குள் இது உலகின் சிறந்த விற்பனையான மருந்தாக இருந்தது, ஆண்டு விற்பனை 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியமையும் குறிப்பிடத்தக்கது.