நவராத்திரியின் 8 ஆம் நாள் வழிபாடு!
நவராத்திரியின் 8 ஆம் நாள் வழிபாட்டில் சரஸ்வதி தேவியை ‘நரசிம்மதாரணி’ என்ற பெயர் கொண்டு வழிபடல் வேண்டும்.
நரசிங்கர் என்றாலே தீமைகளை அழிக்க கூடியவர். அப்படியானவரை நாம் வணங்கும் பொழுது நம்முடைய எதிரி தொல்லை அழிவது மட்டுமின்றி புத்தி கூர்மை ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
இந்த நாளில் 9 வயது சிறுமியை மகா கெளரியாக பூஜிக்க வேண்டும். அஷ்டமி திதி முடிவதற்குள் பத்ம கோலம் இட்டு அம்பாளை வழிபடுதல் சிறப்பு. மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி போன்ற மலர்களால் அம்பாளை வழிபடுதல் சிறப்பு.
பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல் போன்றவற்றை அம்பாளுக்குப் படைக்கலாம். அன்று புன்னகை வராளி ராகத்தில் பாடி அம்பாளை பூஜிக்கலாம். இப்படி வழிபடுவதால் கண் திருஷ்டி, செய்வினை கோளாறுகள் அகலும்.
வெற்றிகளை தரும் நவராத்திரியின் எட்டாம் நாள் இன்று. கரும்பு வில்லுடன் சுற்றிலும் தன்னுடைய படைகளான அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் போரில் ரக்த பீஜனை சம்காரம் செய்த நரசிம்மதாரினியாக அன்னை வணங்கப்படுகிறாள்.