பலதும் பத்தும்
உடல் ஆரோக்கியத்தில் செல்வாக்குச் செலுத்தும் குடல்: சுத்தமாக்குவது எப்படி?
உடல் ஆரோக்கியத்துக்கு அடிப்படை காரணமாக இருப்பது குடல். அதனால் குடலை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
குடலில் கழிவுகள் தேங்குவதால் குடல் பிரச்சினைகள் உண்டாகிறது.
அதுமட்டுமில்லாமல் செரிமானக் கோளாறுகள், போதிய உறக்கமின்மை, போதிய உடற்பயிற்சியின்மை ஆகியவற்றாலும் இக் குடல் சார்ந்த பிரச்சினைகள் உண்டாகின்றன.
மூலிகை தேநீர் வகைகள்
புதினா தேநீர், இஞ்சி தேநீர் போன்றவை குடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றி செரிமான ஆற்றலைத் தூண்டும்.
செம்பருத்தி தேநீர்
இதய ஆரோக்கியத்துக்கு எப்படி செம்பருத்தி சிறந்ததோ, அதேபோல் குடல் ஆரோக்கியத்துக்கும் சிறந்தது.
மோர்
வயிற்றில் ஏற்படும் அசௌகரியங்களை சரிசெய்து செரிமானத்துக்கு உதவும் நல்ல பக்டீரியாக்களை உற்பத்தி செய்யும்.
சீரக தேநீர்
சீரகத்தை தண்ணீரில் போட்டோ அல்லது தேநீராகவோ போட்டு குடித்துவர உடல் கழிவுகள் வெளியேறும்.