ஆசிய உடற்கட்டமைப்பு சம்பியன் சிப் போட்டி: இலங்கையின் விசேட அதிரடிப்படை வீரர் சாதனை
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வீரர் ஒருவர் ஆசிய உடற்கட்டமைப்பு சம்பியன் சிப் போட்டியில் கமல் மாயாதுன்னே சர்வதேச வெற்றி பெற்றுள்ளார்.
இந்திய பாடிபில்டிங் அசோசியேஷன் ஏற்பாடு செய்த ஆசிய உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் இந்தியாவில் நேற்று நடைபெற்றது.
பெண்கள் மற்றும் ஆண்களுக்கான இந்த ஓபன் போட்டியில் இதில் ஆசியாவின் பல நாடுகள் கலந்து கொண்டன.
70 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் சார்ஜன்ட் மாயாதுன்னே வெள்ளிப் பதக்கத்தை வென்று ஒட்டு மொத்த எடைப் பிரிவில் நான்காம் இடத்தைப் பெற்று தாய்நாட்டிற்கு பெரும் புகழை பெற்றுத் தந்தார்.
இதற்கு முன்னர் ஆசிய அயர்ன்மேன் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மாயாதுன்னே பல சிரமங்களுக்கு மத்தியில் உடற்கட்டமைப்பில் ஈடுபட்டு தனது அடங்காத துணிச்சலாலும், உறுதியாலும் சிறந்த முறையில் போட்டியிட்டு இரண்டாவது சர்வதேசப் பதக்கத்தை வென்றுள்ளார்.
பாடிபில்டிங் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் 2025 அர்னால்டு கிளாசிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றனர்.