“தேர்தலில் தோல்வி கண்டால்…இனி நான் இல்லை“
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இத் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இருவரும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் இரு தரப்பினரும் பிரச்சார வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அண்மையில் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இருவரும் நேரடி விவாதத்திலும் பங்கேற்றனர்.
இந்நிலையில் செய்தியாளர் ஒருவர், “நீங்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவீர்களா?” என ட்ரம்பிடம் கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த ட்ரம்ப்,“2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டு, வெள்ளை மாளிகைக்கு திரும்ப முடியாவிட்டால் 2028ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுவேன் என கூறமுடியாது” எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.