14 வருடங்களில் 24 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அதிகாரி: மயக்க மருந்து கலந்து கொடுத்ததாக விசாரணையில் தகவல்
அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணம், லா மிசா பகுதியைச் சேர்ந்த பிரையன் ஜெப்ரி ரேமண்ட் Brian Jeffrey Raymond எனும் அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவு (Central Intelligence Agency – CIA) முன்னாள் அதிகாரி பணியின் நிமித்தம் பல நாடுகளுக்கும் பயணித்துள்ளார்.
அப்போது பெண்களை மயக்கி, பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இவர் மதுபானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பெண்களை மயக்கி, அவர்களுக்கே தெரியாமல் பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவற்றை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாகவும் பதிவு செய்து வைத்துள்ளார்.
அரச சேவையாளரான இவர், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டிலேயே இந்த குற்றச் செயல்களை செய்துள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் தான் செய்த குற்றங்களை ரேமண்ட் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த 14 வருடங்களில் மாத்திரம் சுமார் 24 பெண்களிடம் இவர் மோசமாக நடந்துள்ளதாக மூத்த நீதிமன்ற அதிகாரி நிகோல் அர்ஜெண்டையர் கூறியுள்ளார்.
இவ் வழக்கானது 2020 மே 31ஆம் திகதியன்று புலன் விசாரணை கூட்டாட்சி பணியகம் (Federal Bureau Of Investigation – FBI) அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டது.
மெக்சிகோ சிட்டி பகுதியில் ரேமண்ட்டின் வீட்டு பல்கனியில் நிர்வாண கோலத்தில் பெண் ஒருவர் உதவி செய்யுமாறு கத்தியுள்ளார்.
அவ்வழியே சென்ற ஒருசவர் இதனைப் பார்த்துள்ளார். அதன் பின்னரே ரேமண்டுக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுமார் 500 இற்கும் அதிகமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரேமண்டிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து பெண்ணொருவர் கூறுகையில், “இவர் அரச பணியாற்றுகிறார் என்பது மட்டும் தெரியும். அதனால் பாதுகாப்பை உணர்ந்தேன். ரேமண்ட் மிகவும் கவர்ச்சியாக இருந்தார். அதனால் அவரை விரும்பினேன்” எனக் கூறியுள்ளார்.
டேட்டிங் செயலியொன்றின் வழியாகவே இவர் பெண்களை தொடர்பு கொள்வது வழக்கமாக இருந்துள்ளது.
ரேமண்ட்டினால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர், வேலையை இழந்துள்ளனர். பயங்கர கனவுகள் தங்களுக்கு வருவதாகவும், சிலர் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
ரேமண்ட் 2018 முதல் 2020 வரையில் பணியில் இருந்துள்ளார்.
2020இல் கைது செய்யப்பட்டதுடன் தனது பதவியிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.