பலதும் பத்தும்
குட்டி நிலவு!; பூமியைச் சுற்றுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
இவ் வருடத்தில் தற்காலிகமாக இன்னுமொரு நிலவு பூமிக்குக் கிடைக்கப் போகிறது என்ற தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஒகஸ்ட் மாதம் 7ஆம் திகதி 10 மீட்டர்கள் அளவிலான சிறிய கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்கு Asteroid 2024 PT5 என பெயர் சூட்டப்பட்டது.
இச் சிறுகோளானது, 2024 செப்டெம்பர் 29ஆம் திகதி முதல் 2024 நவம்பர் 25ஆம் திகதி வரையில் பூமிக்கு சிறு நிலவாக செயல்படும்.
இக் குறுகிய காலப்பகுதியில் பூமியைச் சுற்றும்.
மேலும் இது பூமிக்கும் பூமியின் அருகிலுள்ள பொருட்களுக்குமான உறவை ஆராய்வதற்கும் உதவும்.
இது மிகவும் சிறியதாக இருப்பதால் இதனை வெறுங் கண்களால் பார்க்க முடியாது.