உலகம்
வியட்நாம் சூறாவளி: பலியானோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வு
வியட்நாமில், யாகி சூறாவளியால் 200 பேர் உயிரிழந்துள்ளதுடன் 800 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் 125 இற்கும் மேற்பட்டோர் காணாமற்போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாரியளவான வீடுகள் சேதமடைந்துள்ளதாகல் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர.
பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் சீனாவை தாக்கிய போது 24 பேர் உயிரிழந்தனர்.
வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை இலக்குவைத்து யாகி புயல் வீசியதாக கூறப்படுகின்றது.
மணிக்கு 149 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசி தலைநகர் ஹனோயில் யாகி புயல் கரையை கடந்தது. வியட்நாமில் இந்த நூற்றாண்டின் மிக பயங்கரமான புயலாக கருதப்படும் இந்த யாகி, அந்த நாட்டை முழுவதுமாக உலுக்கியது.