உலகம்
உக்ரைனுக்கு 700 மில்லியன் டொலர் நிதி; அமெரிக்கா
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் பல்வேறு திட்டங்களுக்கு 700 மில்லியன் டொலரை அமெரிக்கா நிதியாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ரஷ்யா -உக்ரைன் இடையேயான போர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. போரை நிறுத்த அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. எனினும் அவ்வப்போது உக்ரைனுக்கு அமெரிக்கா நிதியுதவி செய்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், உக்ரைன் சென்ற நிலையில், கீவ் நகரில் அமைச்சர்கள், அதிகாரிகளை சந்தித்து பேசினார்.
இதையடுத்து மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் மின்சாரம், கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு அமெரிக்கா 700 மில்லியன் டொலர் நிதி வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.