உலகம்
வியட்நாமை உலுக்கிய புயல்: நூறிற்கும் மேற்பட்டோர் பலி
வியட்நாமில் யாகி புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நூறிற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் 69 பேர் காணாமற்போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் சீனாவை தாக்கிய போது 24 பேர் உயிரிழந்தனர்.
வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை இலக்குவைத்து யாகி புயல் வீசியதாக கூறப்படுகின்றது.
மணிக்கு 149 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசி தலைநகர் ஹனோயில் யாகி புயல் கரையை கடந்தது. வியட்நாமில் இந்த நூற்றாண்டின் மிக பயங்கரமான புயலாக கருதப்படும் இந்த யாகி, அந்த நாட்டை முழுவதுமாக உலுக்கியது.