இந்தியா வருகிறார் ஜெலன்ஸ்கி: தூதரக அதிகாரி தகவல்
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் ரஷ்யா -உக்ரைன் நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறைப்பயணம் மேற்கொண்டார்.
உக்ரைன் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.
”போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. வெறும் பார்வையாளராக ஒதுங்கிக் கொள்ளவும் இல்லை. அமைதியின் பக்கமே இந்தியா உள்ளது” என இந்த பயணத்தில் மோடி சுட்டிக்காட்டினார்.
உக்ரைன் போரை முடிவுக்கு கெண்டு வருவதற்கான முயற்சியை பிரதமர் மோடி முன்னெடுத்துள்ள நிலையில் இந்தியாவிற்கான உக்ரைன் தூதரக அதிகாரி ஒலிக்ஸாண்டர் பொலிஷ்செவுக் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த ஆக. 23-ஆம் திகதி இந்திய பிரதமர் மோடி உக்ரைன் வருகை தந்தார்.
அப்போது பரஸ்பரம் நட்புறவு மேம்பட இந்தியா வருமாறு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு அழைப்பு விடுத்தார். அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். இந்தாண்டு இறுதியில் அரசு முறைப்பயணமாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இந்தியா வர வாய்ப்புள்ளது என்றார்.