அதிக விடுமுறை எடுத்த பைடன் – குடியரசுக் கட்சி குற்றச்சாட்டு: மறுத்து வெள்ளை மாளிகை விளக்கம்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ளது.
இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் களமிறங்கியுள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் இரு தரப்பினராலும் மும்முரமாக நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் அவரது நான்கு வருட பதவிக் காலத்தில் 532 நாட்கள் விடுமுறை எடுத்துள்ளதாக குடியரசுக் கட்சி நிறுவனம் ஒன்றின் மூலமாக மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
532 நாட்கள் எனப்படுவது அவரது பதவிக் காலத்தில் 40 சதவீதம் ஆகும்.
அமெரிக்காவைச் சேர்ந்த அரச ஊழியர் ஒருவர் 48 வருடங்களுக்கு எடுக்கக்கூடிய விடுமுறையை பைடன் வெறும் 4 வருடங்களில் எடுத்துள்ளார் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி அமெரிக்க அரச ஊழியர் ஒருவர் வருடத்துக்கு ஆகக்கூடியது 14 நாட்கள் மட்டுமே சம்பளத்துடனான விடுமுறை பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் ஜோ பைடன் மீது குடியரசுக் கட்சியின் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
ஆனால், விடுமுறையின் போதும் ஜோ பைடன் கடமைகளை நிறைவேற்றுவதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.