பர்கினோ பசோவில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்: 200 பேர் உயிரிழப்பு
மேற்கு ஆபிரிக்க நாடான பர்கினோ பசோவில் நடத்த தீவிரவாதத் தாக்குதலில் 200 பேர் உயிரிழப்பு.
பர்கினோ பசோவில், கடந்த செப்டெம்பர் மாதம் இராணும் ஆட்சியைக் கைப்பற்றியது. அதேவேளை அந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புக்களும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இந்த தீவிரவாத குழுக்கள் பாதுகாப்ப படையினர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
அத் தீவிரவாத குழுக்களை அழிப்பதற்கு பாதுகாப்பு படையினருக்கு உதவியாக அரசுக்கு ஆதரவான குழுக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை பர்கினோ பசோவின் பர்சலொகொ மாகாணம் கயன் நகருக்குள் புகுந்த தீவிரவாதிகள், அங்கிருந்த பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இத் தாக்குதலில் 200 பேர் உயிரிழந்துள்ளதோடு 140 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, இத் தாக்குதல் சம்பவத்துக்கு அல்கொய்தாக தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.