முச்சந்தி

சிறுவர் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி; 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கடந்த மார்ச் மாதம் வரையான பத்து வருட காலப்பகுதிக்குள் அனாதை இல்லங்களில் குழந்தைகளின் எண்ணிக்கை 3353 ஆள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்னடத்தை மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் 2014ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான தரவுகளை ஆராய்ந்ததில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தின் 2014ஆம் ஆண்டில், நாடளாவிய ரீதியில் உள்ள 38 கிளைகளில் தங்கியிருந்த குழந்தைகளின் எண்ணிக்கை 12,610 ஆகம்.

எனினும், டிசம்பர் 2023க்குள் அந்த இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 9258 ஆகக் குறைந்துள்ளது.

இதற்கிடையில், டிசம்பர் 2023 இறுதிக்குள் குழந்தைகளுக்கு எதிரான 605 கடுமையான பாலியல் துஷ்பிரயோகங்கள் நடந்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

ஜூலை 2024 இல் குழந்தைகள் பாதுகாப்பு அமலாக்கக் குழு நியமிக்கப்பட்டதுடன் செப்டம்பர் 2023 இல் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து மாகாண நன்னடத்தை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சேவை ஆணையர்களிடமிருந்தும் குழந்தைகள் இல்லம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகள் குறித்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.