புவி ஈர்ப்பு விசை; எறும்புக்கும், கல்லுக்கும் ஒரே அளவில் இருக்கின்றன
உருண்டையான பூமியிலிருக்கும் எனில் அடியிலிருக்கும் மக்கள் தலைக்கீழாக ஒட்டிக்கொண்டுதானே இருக்கவேண்டும். மாறாக, பூமியின் எல்லா இடங்களும் சமதளமாகவே இருப்பது, எப்படி? பூமியின் அளவு மனிதனை ஒப்பிட்டால் மிகமிகப்பெரியது. பூமி தட்டை இல்லை நிரூபித்தாகிவிட்டது.
Diameter 1, 27,42, 000 ஒன்னே கால் கோடி மீட்டர் பூமியில் , மனிதன் கால் வைத்து நிற்பது வெறும் கால் மீட்டர் அளவு.
இப்பொழுது நீங்கள் கீழே ஆஸ்திரேலியாவில் நில்லுங்கள். புவி ஈர்ப்பு விசை உங்களை தரையில் உள்ள ஓவ்வொரு புள்ளியிலிருந்தும் பூமியின் மையப் பகுதியை நோக்கி இழுப்பதால் நட்டுக்கு இழுக்கப்பட்டு நிற்கிறீர்கள்.
பூமி உங்களை கீழே இழுக்கிறது நீங்கள் பூமியை மேலே இழுக்கிறீர்கள். ஆக இரண்டும் ஒன்றுதான்.
பந்து போன்ற பூமியில் நீங்கள் எந்த இடத்தில் நின்றாலும் , தரையில் கீழே நின்று கொண்டு இருப்பது போன்றும், வானம் மேலே இருப்பது போன்றும் தெரியும்.
ஒரு பந்தை மேல் நோக்கி எறியுங்கள். அது உங்களின் சக்தியால் மேல் கிளம்பி ஏன் கீழே விழுகிறது ? உங்களின் கருத்துப்படி அது திரும்பி வரக்கூடாது அல்லவா ? இதைத்தான் 1915ல் நியூட்டன் ஆப்பிள் ஏன் கீழே என் தலையில் விழுந்தது, வேறு தூரத்தில் பூமியின் விசையால் ஏன் விழவில்லை என கேட்டார்?
பூமி வினாடிக்கு 465 மீட்டர் வேகத்தில் சுற்றிக்கொண்டல்லவா இருக்கிறது ? நீங்களும் சேர்ந்து சுற்றிக் கொண்டு இருக்கிறீர்கள். பூமியின் வளிமண்டலமும் காற்றும் அதே வேகத்தில் சுற்றிக் கொண்டு இருக்கிறது. விமானத்தில் பறந்து கொண்டு இருந்தாலும் நீங்கள் 30,000அடி உயரத்தில் வளிமண்டத்தில் விமானம் தனது சக்தியால் கிழித்துக் கொண்டு பறக்கிறது. ரயில் தரையின் மீது காற்றை கிழித்துக் கொண்டு ஓடுகிறது. நீங்கள் ரயிலினுள் உட்கார்ந்திருந்தாலும், விமானத்தினுள் உட்கார்ந்திருந்தாலும் ஒன்றே. ரயிலுக்குள் எழுந்து நடப்பது விமானத்தினுள் எழுந்து நடப்பதும் ஒன்றே.
ஒரு வட்டமான கல். இதன் மேல் எறும்பு ஊறுவது நீங்கள் கேட்கும் கேள்விக்கும் சரி. சரியாக கல்லை எறும்பு பிடிக்காவிட்டால் கீழே விழுந்துவிடும்.
என்ன வித்தியாசம் ?
புவி ஈர்ப்பு விசை. எறும்புக்கும், கல்லுக்கும் ஒரே அளவில் இருக்கின்றன.
சரியாக பிடிக்கவில்லை என்றால் தலைகீழ் விழுந்து மண்டையில் அடி விழும், எங்கே, தரையில் விழும்போது, ஏன்? பூமி எறும்பை மையத்துக்கு இழுக்கிறது !