தங்க பேய்…
மனித இனத்தில் தங்கம் பரவலாக அறியப்பட்டிருந்தது. மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு இரும்பும், செம்பும் தொழில்நுட்ப வளர்ச்சியில் உதவியாக இருந்தது என்று தான் கருதி வந்தோம். ஆனால், தங்கம்தான் முதலில் வந்தது.
வேலை செய்வதற்கு இலகுவான உலோகமாக தங்கம் இருந்தது. ஆபரணங்கள் செய்வதற்கு தங்கம் பயன் படுத்தப்பட்டது. சக்தி வாய்ந்த அறிதான உலோகமாக இருந்ததால் தங்கம் நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டது.
தொடக்ககால நாகரிகங்களில் தங்கத்தை கடவுளாகவும், அரசர்களாகவும் மக்கள் மதித்தார்கள். கடவுளின் பெயரால் மன்னரின் பெயரால் தங்கம் படைக்கப்பட்டது.
அழகும், சக்தியும் ஒருங்கேபெற்ற தங்கம் புராதன காலத்திலேயே சிம்மாசனம் மற்றும் கடவுள் சிலைகளை செய்வதற்கு பயன்படுத்தப்பட்டது. உணவு தட்டுகள், கப்புகள், பாத்திரங்கள், ஆபரணங்கள் என்று தனிப் பட்ட பல்வேறு உபயோகங்களுக்கு தங்கம் பயன் படுத்தப்பட்டது.
ட்ராய் யுத்தத்தின் மொத்த நோக்கமே தங்க குவியலை கைப்பற்றுவதுதான் என்று கூறப்படுகிறது. கி.மு.2460-2600 காலகட்டத்திற்கு இடையில் கண்டறியப் பட்ட தங்க குவியலில் இருந்த நகைகளும், பொருள்களும் வியக்க வைத்தன.
தங்கம் பணமாக கருதப்படுவதற்கு முன்பே தங்கத்தின்மீது மனிதர்களுக்கு ஈர்ப்பு அதிகமாக இருந்தது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே தங்கம் புலக்கத் தில் இருந்தாலும் கி.மு.700ல் தான் பணமாக கருதப் பட்டது.
பணமாக கருதப்படுவதற்கு முந்திய காலத்திலேயே தங்கத்திற்காக மனிதன் எல்லா வகையிலும் முயற்சிகளை மேற்க்கொண்டான். கிரீசில் கி.மு.550- க்கு முன்னரே மத்திய தரைகடல் நாடுகளில் தங்கச் சுரங்கங்கள் அறிமுகமாகின. அந்தக்கால கட்டத்திலேயே கிரீஸ் தங்க நாணயத்தை அறிமுகப்படுத்தியது.
பினிசியர்கள், எகிப்தியர்கள், இந்தியர்கள், ஹைத்தியர் கள், சீனர்கள் என உலகின் பல்வேறு பகுதியினரும் தங்கத்தைத் தேடி அலைந்தனர். தங்களிடம் சிக்கிய போர் கைதிகளை தங்கச் சுரங்கங்களில் அடிமைகளாக வேலை வாங்கினர்.
கிரேக்க அறிஞர்களான பிளேட்டோ, அரிஸ்டாட்டில் உள்ளிட்டோர் தங்கத்தைப் பற்றி நிறைய எழுதினார்கள். தங்கம் தண்ணீருடன் தொடர்புடையது என்ற உண்மையை யை அவர்கள் எழுதினார்கள். தண்ணீர் மற்றும் சூரிய ஒளியின் அடர்த்தியான கலவைதான் தங்கம் என்று கூறப்படுகிறது.
தங்கத்தை தோண்டி எடுப்பதுக்குறித்த நடைமுறைகளை கிரேக்கர்கள் வெகு முன்னதாகவே அறிந்திருந்தனர். அலெக்சாண்டர் கட்டித்தங்கம் வெட்டியெடுத்து… இறந்த பிறகு ஆசியா மைனர், எகிப்து ஆகிய பகுதிகளில் தங்கச் சுரங்கங்கள் உருவாகின. அவற்றில் சில அரசுக்கு சொந்தமாகவும் வேறுசில தனியாருக்கு சொந்தமாகவும் இருந்தன. தனியார் சுரங்கங்கள் அரசுக்கு குறிப்பிட்ட அளவு தங்கத்தை பிரித்துக் கொடுத்தன. சைத்தியர்கள், சிம்மேரியர்கள் உள்ளிட்டோரும் தங்கச் சுரங்கங்களை உருவாக்கினார்கள்.
கிரேக்கத்திலும், ரோமிலும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் உருவாக்கப்பட்டு உலகப் பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளில் வியாபாரத்திற்கு இந்த நாணயங்கள் உதவியாக இருந்தன. பண்டமாற்று முறைக்கு மாற்றாக நாணயமுறை அறிமுகமானது.
பணம் அறிமுகமானது. ஆனால், அதன் பெயர் தங்கம் என்றே இருந்தது. தென்னமெரிக்காவில் வாழ்ந்த இன்கா பழங்குடியின மக்கள் தங்கத்தை சூரியனின் கண்ணீர் என்று அழைத்தார்கள். கிரேக்க கவிஞரான ஹோமர், தான் எழுதிய இலியட், ஒடிஸி ஆகிய காவியங்களில்
தங்கத்தை பயன் படுத்தியிருக்கிறார். சாதாரண மக்களின் சொத்தாக தங்கத்தை அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
எகிப்தின் முதல் பேரரசான மீன்ஸ் பேரரசில் கி.மு.3100ல் ஒருபங்கு தங்கம் இரண்டரை பங்கு வெள்ளிக்கு சமம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.
கி.மு.1320ல் எகிப்தில் உள்ள தங்கச் சுரங்கங்கள், அவற்றுக்கு செல்லும் வழி, அவற்றில் வேலை செய்பவர்களின் குடியிருப்புகள் ஆகியவற்றை குறிப்பிடும் வரைபடம் எழுதப்பட்டிருந்தது.
தங்கம் முதல்முறையாக கி.மு.700ல் பணமாக பயன்படுத்தப்பட்டது. லிதிய வியாபாரிகள் இந்த நாணயங்களை உருவாக்கினார்கள். 63 சதவீதம் தங்கமும், 27 சதவீதம் வெள்ளியும் கலந்த கலவையாக இந்த நாணயம் இருந்தது.
எகிப்தின் முதல் பேரரசான மீன்ஸ் பேரரசில் கி.மு.3100ல் ஒருபங்கு தங்கம் இரண்டரை பங்கு வெள்ளிக்கு சமம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.