’தம்பியிடம் மனம் நொந்து அண்ணனிடம் இணைந்தேன்’
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 20 வருட கால நட்பினை முறித்துக் கொண்டுள்ள அக்கரப்பத்தனை முன்னாள் பிரதேச சபைத் தலைவர் ராமன் கோபால் தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து கொண்டார்.
இவ்வாறு இணைந்து கொண்ட இராமன் கோபாலுக்கு, தொழிலாளர் தேசிய சங்கத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் உத்தியோக பூர்வமாக இணைவு கடிதத்தை வழங்கி கட்சிக்கு இணைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஹட்டனில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற தொழிலாளர் தேசிய சங்க கூட்டத்தில் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டு இவரை உத்தியோகப்பூர்வமாக இணைத்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
எனது தந்தை இ.தொ.காவின் நீண்ட கால விசுவாசி அதேபோல நான் 20 வருடகால விசுவாசி அதற்காக எனக்கு கிடைத்த சன்மானம் மூன்று மாத பிரதேச சபை தலைவர் மட்டுமேயாகும் என்றார் ராமன் கோபால் .
அதுவும் அக்கரப்பத்தனை பிரதேச சபை கலைக்கப்படும் நிலையில் இந்த சபை அபிவிருத்தியில் பின் தள்ளப்பட்ட நிலையிலும் காங்கிரஸில் எழுதாத வரலாற்றில் தனக்கு இந்த பதவி வழங்கப்பட்டது அதை சரிவரச் செய்து 90 நாட்களில் சாதனை படைத்தேன்.
அதேநேரம் நான் அக்கரப்பத்தனை பிரதேச சபை தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் பெற்று தெரிவாகினேன்.ஆனால் என்னைப் புறக்கணித்து மற்றவர்களுக்குப் பதவிகள் வழங்கப்பட்டன.
அதேபோலவே அண்மையில் ஆளுநர் ஊடாக வழங்கப்பட்ட பதவியிலும் புறக்கணிக்கப்பட்டு மனம் நொந்த நிலையில் அண்ணன் திகாம்பரத்துடன் இணைந்து கொண்டேன் இந்த மாற்றம் மலையகத்தில் அனைத்து இடங்களிலும் நிலவ வேண்டும் என்றார்.