பிரித்தானியாவில் இலங்கை இராணுவ அதிகாரி ஒருவர் மாயம்; தீவிர விசாரணைகள் முன்னெடுப்பு
பிரித்தானியாவின் புகழ்பெற்ற Sandhurst இராணுவ கல்லூரியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய இலங்கை கெடட் அதிகாரி, ஒருவர் காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாவனல்லையை வசிப்பிடமாகக் கொண்ட முகமது அனீக் என்ற அதிகாரியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
44 வார தீவிர பயிற்சிக்குப் பிறகு வெளியேறிய 209 அதிகாரிகளில் ஒருவராக இருந்த முகமது அனீக் திட்டமிட்டப்படி நாடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இந்த வாரம் நாடு திரும்பத் திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டமிடப்பட்ட விமானத்தைத் அவர் தவறவிட்டுள்ளார்.
கடந் சனிக்கிழமை அவர் நாடு திரும்பவிருந்த போதிலும், அவர் விமான நிலையத்திற்கு வருகைத் தரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த அதிகாரி திட்டமிட்டபடி இலங்கைக்கு திரும்பவில்லை என்பதும், அவர் இருக்கும் இடம் இன்னும் தெரியவில்லை என கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
பயிற்சிக்கு பின்னராக அணிவகுப்பை அடுத்து, திட்டமிட்டபடி குறித்டத அதிகாரி இலங்கைக்கு திரும்பவில்லை என பிரித்தானிய அதிகாரிகள் எச்சரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் கே.ஏ.என்.ரசிக குமார தெரிவித்துள்ளார்.