பலதும் பத்தும்

ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நிலையங்கள் நிறுத்திவைப்பு!…. சங்கர சுப்பிரமணியன்.

தலிபான் ஆப்கானிஸ்தானில் இஸ்லாம் மற்றும் நாட்டின் கொள்கைகளை தவிர்ப்பதால் இரண்டு தொலைக்காட்சி நிலையங்களை நிறுத்தி வைத்துள்ளது. நூர் தொலைக்காட்சி மற்றும் பர்யா தொலைக் காட்சி இரண்டும் நீதிமன்ற முடிவு வரும்வரை இயங்காது.

தகவல் அமைச்சகத்தின் ஊடக மீறல் ஆணையத்திலிருந்து ஹபிணுல்லா பரக்சய்
என்ற அதிகாரி ஒருவர் காபுலில் இருந்து இயங்கும் இந்த இரு தொலைக்காட்சிகளின்
வழக்குகளையும் நீதிமன்றம் விசாரணை நடத்தும் என்று கூறியிருக்கிறார்.

தொடரந்து எடுத்துரைத்து எச்சரிக்கை செய்தபின்னும் நூர் மற்றும் பர்யா தொலைக்காட்சிகள் பத்திரிகையாளர்களின் கோட்பாடுகளை பின்பற்றவும் இல்லை நாட்டின் இஸ்லாமிய கொள்கைகளையும் கவனத்தில் கொள்ளவில்லை என்றுபரக்சி
செவ்வாய்க் கிழமையன்று கூறினார்.

இந்த மீறல்களைப் பற்றி மேற்கொண்டு அவர் தகவல் எதையும் கூறவில்லை. 2021ல் தலிபான் ஆப்கானிஸ்தானை கையகப் படுத்தியபின் பல பத்திரிகையாளர்கள் தங்கள் வேலையை இழந்துள்ளார்கள். பல ஊடகம் சார்ந்த இடங்கள் பணப் பற்றாக்குறையாலோ அல்லது அவர்களின் பணியாளர்கள் நாட்டைவிட்டு சென்றதாலோ மூடப்பட்டுவிட்டன.

பெண் பத்திரைகையாளர்கள் வேலைத்தடை மற்றும் போக்குவரத்து தடைகளால் மேலும் சிரமப்படுகிறார்கள்.

இரு தொலைக்காட்சிகளிடம் இருந்தும் நிறத்தப்பட்டதைப் பற்றி எந்தப் பேச்சும் இல்லை. நூர் தொலைக்காட்சி 2007ல் தொலைக்காட்சியைத் தொடங்கியது. இதன் பின்னால் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும் ஜமியட்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவருமான சலாவுதின் ரப்பானி இருந்தார்.

முன்னாள் பிரதமரும் ஹிஸ்ப்-இ- இஸ்லாமி கட்சியின் தலவருமான இன்னும் காபுலில் இருக்கும் குல்புதின் ஹெக்மதியருக்கு சொந்தமான பர்யா தொலைக்காட்சி 2019ல் தொடங்கப் பட்டது.

இவ்விதமான நிறுத்திவைப்பை ஆப்கானிஸ்தான் பத்திகையாளர் மையம் தலிபான் தலைமையிலான அரசின் அநீதியற்ற  செயல் என்று அறிவித்துள்ளது. இதுபோன்று ஊடகங்களை நிறுத்திவைப்பது இந்நாட்டில் ஊடகங்களின் மீது தடைகளை விதிக்க இன்னொரு வழி என்றும் கூறியுள்ளது.

2023 ஆண்டறிக்கையிலிருந்து இந்த மையம் பத்திகையாளர்களின் உரிமைகள மீறிய 168 நிகழ்வுகள் நடந்திருப்பதை எடுத்து பதிவிட்டுட்டுள்ளது. இதில் ஒரு இறப்பும் 61 கைதும் நடந்துள்ளது. 2022ஐ ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டிருப்பினும் 260 நிகழ்வுகள் நடந்துள்ளன என்று இம்மையம் கூறுகிறது.

எட்டு ஊடகங்கள் சார்ந்த இடங்கள் 2023ல் தடை செய்யப்பட்டுள்ளது. ஐந்து இடங்கள் இயங்கவிடாமல் தற்காலிகமாக தடைசெய்யப் பட்டதுடன் மூன்று இடங்கள் மொத்தமாக மூடப்பட்டு விட்டன.

நல்ல ஆட்சி கொடுப்பதாக உறுதியளித்துக் கொண்டே தலிபான் அவர்கள் கூறும் இஸ்லாமிய சட்டம் அல்லது ஷரியாவை அன்றாட வாழ்கக்கையின் பலவழிகளில் திணிக்கிறார்கள்.

ஆட்சிக்கு வந்த முதல் முறையிலேயே 1990ன் பின்பகுதியில் தலிபான் அநேகமான தொலைக்காட்சிகளுக்கு தடைவிதித்தார்கள்.வானொலிகளுக்கம் செய்தித்தாள்களுக்கும் இந்நாட்டில் தடை விதித்தார்கள்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.