இலக்கியச்சோலை

கோவிலூர் செல்வராஜன்……. கலை,இலக்கிய,ஊடகத்துறையில் கால்பதித்து ஐம்பது ஆண்டுகள் நிறைவு!

கிழக்குமாகாணத்தில் மட்டக்களப்பு பிரதேசத்தில் தென்பகுதியில்அமைந்திருக்கின்ற அழகிய கிராமம் திருக்கோவில் என்னும்கிராமம். (இப்போது அம்பாறை மாவட்டம் )இந்த கிராமத்தில்தான் மட்டக்களப்பின் முதலாவதுதிருப்படைக் கோவிலான ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோவில்அமைந்திருக்கிறது. இந்த சீர்மேவும் திருக்கோவில் பதியில்தான்திரு.கோவிலூர் செல்வராஜன் அவர்கள் பிறந்தார்.இவரது இயற்பெயர் இராசையா.செல்வராஜன். திரு.இராசையாஅவர்களுக்கும், திருமதி அழகம்மா.அவர்களுக்கும் மகனாக18.09.1952 அன்று இவர் பிறந்தார். இவர் தந்தை ஒரு விவசாயி,வியாபாரி. இவருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும்,ஒரு மூத்தசகோதரனும்,ஒரு இளைய சகோதரனும் உடன்பிறப்புகளாகஇருந்தார்கள்.ஆனால் இப்போது இருப்பது ஒரே ஒரு இளையசகோதரன் மட்டுமே. இவரது பெற்றோரும், ஏனைய மூன்றுஉடன்பிறப்புகளும் அமரர்களாகிவிட்டனர். இவர் தனது சிறு வயதிலிருந்துஇவரது சின்னம்மா தனலெட்சுமி ஏகாம்பரம் அவர்களிடமேவளர்ந்து வந்தார். தம்பிப்போடி ஏகாம்பரம் அவர்கள் இவரது பாட்டனார்அவர் சிறந்த கல்வியாளர். தம்பிலுவில் கிராமத்தில் இருந்த பெரியமேட்டுக்குடியை சேர்ந்தவர். அவருக்கு புராண,இதிகாசங்கள் எல்லாம்நன்கு தெரியும்.அதனால் அவரது மகள் தனலெட்சுமிக்கும் அவை அத்துப்படி. இந்த பின்புலத்தில்தான் திரு.செல்வராஜன் அவர்கள் வளர்ந்து வந்தார்.தனது ஆரம்பக் கல்வியை இவர் திருக்கோவில் மெதடிஸ்த மிசன்பாடசாலையில் கற்றார். அதன்பின்னர் கல்வி பொதுத் தராதரம் வரைதம்பிலுவில் மகாவித்தியாலயத்தில் கற்றார்.(இப்போது அது கல்லூரி)தனது உயர்தரக் கல்வியை மட்டக்களப்பில் கற்று தேர்ந்தார். அதன்பின்னர்பேராதனை பல்கலைக்கழகதில் வெளிவாரிப் தேர்வு நாடியாக இருந்துபட்டம் பெற்றார். இது இவரது பிறப்பும்,குடும்ப பின்னணியும்,கல்விசார்ந்த தகவல்களுமாகும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@இனி இவரது கலைச் சிறப்புகள் பற்றி சற்று விரிவாக ஆராய்வோம்.திரு.கோவிலூர் செல்வராஜன் அவர்கள் இன்று உலகளாவிய ரீதியில்ஒரு பன்முக கலைஞர் என்று அறியப்பட்டு இருகின்றார் என்றால் அதற்கு காரணம் அவரது கடின உழைப்பும்,அந்த உழைப்புக்கு பின்னால் உள்ளபலரின் பங்களிப்பும் என்றுதான் சொல்லவேண்டும். சிறுவயதிலிருந்தேஇவருக்கு தமிழிலும்,தமிழ் கலைகளிலும் அதீத ஆர்வம் இருந்தது.பள்ளியில் படிக்கும்போதே பாட்டு,பேச்சு,நாடகம் என்று மிகுந்தஈடுபாட்டுடன்தான் இருந்தார். திருக்கோவில் முருகன் ஆலயத்தில்உற்சவ காலங்களில் நிகழ்சிகள் செய்யும் இவரது உறவினர்களோடுசேர்ந்து தானும் பங்கேற்பது. அவர்களோடு சேர்ந்து நாடகங்கள் நடிப்பதுதிரைப்படங்கள் பார்ப்பது. அந்த திரைப் படங்கள் பற்றி விமர்சனம் செய்வதுஎன்று இருந்த இவர்,திருகோவிலில் உதயசூரியன் கலாமன்றம் என்றகலை மன்றம் உருவானபோது அதில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டுஅதன் வளர்சியிலும், அந்த கலா மன்றத்தால் நடத்தப்பட்ட கலை நிகழ்சிகளில்பங்குகொண்டும் தன்னை வளர்த்துக் கொண்டார். கோவில் உற்சவ காலங்களில்மற்றும், விளையாட்டுப் போட்டிகளில் நடைபெறும் நிகழ்சிகளை தொகுத்துவழங்குவது இவருக்கு பிடித்த விடயம். அது பிற்காலத்தில் இவர் ஒலிபரப்பு துறையில்பிரவேசிப்பதற்கு மிகவும் உதவியது.சரி இவர் மட்டக்களப்பில் உயர்தரம் படித்துக்கொண்டு இருக்கும்போது மட்டக்களப்பில்உள்ள இசைக்குழு ஒன்றில் இணைந்து கொண்டார். அதற்கு இவரது மைத்துனர் பக்கபலமாக இருந்தார். இவர் மைத்துனர் இரா.தெய்வராஜன் ஒரு பாடகர். திருக்கோவிலைசேர்ந்த இவர் மட்டகளப்பில் குடும்பத்துடன் இருந்தார். பயிற்றப்பட்ட ஆசிரியர். இவரிடமும்பல திறமைகள் இருந்தன. திரு.செல்வராஜன் அவர்களுக்கு இவர் மைத்துனர் ஒரு அகத்தூண்டலாகஇருந்திருக்கின்றார். இவர்களுக்கு உரிய பாடல்களை மட்டக்களப்பின் சிறந்த கவிஞர்களில்ஒருவரான அமரர் எருவில் மூர்த்தி அவர்களே அந்தக் காலத்தில் எழுதிக்கொடுத்தார்.பிற்காலத்தில் கோவிலூர் செல்வராஜன் ஒரு பாடலாசிரியராக வருவதற்கு கவிஞர் எருவில் மூர்த்திஅவர்களே அகத்தூண்டல் என்றால் அது மிகையாகாது. இவர் இணைந்துள்ள இசைக்குழுவினர்  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கோவில்களில்திருவிழாக்கள் நடக்கும் உற்சவ காலங்களில் இசை நிகழ்சிகள் செய்வார்கள் அதில் செல்வராஜன்அவர்கள் கலந்துகொள்வார். இவர் இருந்த ஜெயாலயா என்ற இசைக்குழுதான் முதல் முதலில் இலங்கைஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தங்கள் ஒலிப்பதிவை செய்து பாடல்களை காற்றலையில்தவழவிட்டது. இலங்கை வானொலியில் பின்னாளில் திரு கோவிலூர் செல்வராஜன் இணைவதற்குஅந்த நிகழ்வை அத்திவாரமாக எடுத்துக் கொள்ளலாம். சரி இனி இவரின் வரலாறு எப்படிஅமைகிறது என்று பார்ப்போம்எழுபதுகளின் ஆரம்பத்தில் கொழும்பு சிவா என்டர்ரெயின்மென்ஸ்மூலமாக தலைநகருக்கு அழைக்கப்பட்டார் .  எப்படியென்றால் அந்த நிறுவனத்தின்பணிப்பாளர் திரு. எஸ்.சிவஞானம் அவர்களின் தந்தையார் அக்கரைப்பற்றில்ஒரு நகைக்கடை வைத்திருந்தார். அவரிடம் அடிக்கடி வரும் சிவா அவர்கள்ஒருமுறை, பொத்துவிலுக்கு தெற்கே அமைந்துள்ள உகந்தைமலை முருகன்உற்சவ காலத்தில் கலந்துகொள்ள வந்திருந்தார். திரு.செல்வராஜன் கோவில் நிகழ்சிகளை ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்துகொண்டு இருந்தார் . அப்பொழுதுசிவஞானம் அவர்கள் இவரை அணுகி நன்றாக பேசுகின்றீர்களே. என்னோடு கொழும்புக்குவரலாமே, நான் பொப் இசை நிகழ்சிகளை நடத்துகின்றேன்.நீங்கள் அங்குமேடையில் அறிவிப்புகள் செய்யலாம் என்றார். இவரோ அதை விளையாட்டாகஎடுத்துக்கொள்ள, அவரோ விடுவதாக இல்லை.   பின்னர் சரி பார்க்கலாம் என்று செல்வராஜன் சொல்லிவிட்டார்..அந்தக்காலம் ஈழத்துப் பொப்பிசை பாடல்கள் வரவேற்புப் பெற்றிருந்த காலம்.இவர் மட்டக்களப்பில் உயர்தரம் படித்துக் கொண்டிருந்ததால் . அந்த பரீட்சைஎழுதிவிட்டு செல்ல இவருக்கு உத்தேசம் இருந்தது. வீட்டில் இவர் செல்லமென்ற படியால்அப்பா,அம்மா அவர்களிடம் சொல்லி சரிக்கட்டி விடலாம் என்று எண்ணிக்கொண்டார்இவருக்கு மீடியாவுக்குள் வேலை செய்யவேண்டும் என்ற எண்ணம் ஆரம்பத்திலிருந்தேஇருந்தது.  பின்னர் இவர் உயர்தரம் சித்தியடைந்தபின் ஆசிரியர், எழுதுவினைஞர் போன்ற வேலைகள் கிடைக்க இருந்தன. இவர் ஒரேபிடியில் தான் ஒரு ஊடகவியலாளராகவே ஆக வேண்டுமென்று விரும்பினார். அந்தவகையில் நண்பர் சிவா அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திஅவர் முன்பு அழைத்தபடி கொழும்பு சென்றார். அவருடன் அவர் வீட்டில் தங்கி இருந்தேதனது கலை,இலக்கிய வாழ்வுக்கு அத்திவாரம் போட்டார்..  சிவா என்டர்ரெயின்மென்ஸ் மூலம்பல இசை நிகழ்சிகள், பொப் இசை நிகழ்சிகள் செய்தார் . அந்த நேரத்தில் மறைந்த நண்பர்கே.எஸ். ராஜா கூட இவருக்கு நண்பராகினார். சிவாவின் நிகழ்சிகளை அவருடன் சேர்ந்துஇவரும் தொகுத்து வழங்கினார் . கொழும்பு,மலையகம்,யாழ்,என்று நிகழ்சிகளை நடத்தினார்கள் .சிவாவிற்கு கொழும்பு செட்டியார் தெருவில் மெய்கண்டான் நிறுவனத்துக்கு சொந்தமானகட்டிடத்தில் ஒரு நகைக் கடையும் இருந்தது. அங்கு இவர் அடிக்கடி சிவாவுடன் இருப்பார்அந்த நேரம் மெய்கண்டான் குமரகுருநாதன் அவர்கள் அடிக்கடி இவரோடு வந்து பேசுவார்.அவர் அப்பொழுது கலாவல்லி என்ற சஞ்சிகையை வெளியிட்டு வந்தார். அவர் கோவிலூர் செல்வராஜனைஅந்த பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருக்கும்படி கேட்டார். சிவாவும் அதற்கு ஒப்புதல்தர,இவர் அந்த பதவியில் அமர்ந்துகொண்டு செயல்படத் தொடங்கினார் . அதேநேரம் இவர்தன்னை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி தேர்வுனாடியாக பதிவு செய்துகொண்டுபட்டப் படிப்பையும் மேற்கொண்டார் . இதனிடையில் கலாவல்லியில் “இளமைக் கோவில் ஒன்று “என்ற இவரின் முதலாவது தொடர் வந்தது.. அதன்பின்னர் இவர் மெய்கண்டான் நிறுவனத்தாருடன் சேர்ந்து  “நட்சத்திர மாமா”என்ற சிறுவர்களுக்கான சஞ்சிகை ஒன்றையும் வெளியிட்டார்..அதில் இவர்  “மலைக்கோட்டை மர்மம்”என்ற ஒரு தொடரை எழுதி வந்தார்..இதைவிட ஈழத்துக் கலைஞர்கள்,தமிழ் நாட்டிலிருந்து வரும்கலைஞர்கள் என்று நேர்காணல் செய்து கலாவல்லியில் பிரசுரித்தார்.. இந்த காலத்தில் தினகரன்,வீரகேசரி போன்ற பத்திரிகையிலும் சிறுகதைகள் அவ்வப்போது எழுதிவந்தார்..ஈழத்தில்பத்திரிகைத் துறைக்கு அது ஒரு பொற்காலம் என்றுதான் சொல்லவேண்டும்.கொழும்பு திரைப்படக் கூட்டுத்தாபனதில் தமிழ் பிரிவுக்கு,  மறைந்த இவரது நண்பர் கே.எஸ்.ராஜாஅன்று பொறுப்பாக இருந்தார். இ.ஒ.கூட்டுத்தாபனத்திலும் அவர் பகுதி நேர அறிவிப்பாளராக இருந்தார்.புதிய தமிழ் திரைப்படங்கள் திரையிடமுன், பத்திரிகையாளர்களுக்கான காட்சிக்கு செல்வரஜனை கே.எஸ்.ராஜா அவர்கள்அழைப்பார்.   பொப் நிகழ்சிகளில் இவர்கள் இருவரும் ஏலவே அறிமுகமாகி இருந்தார்கள் அல்லவா. அந்த நட்பினோடு இவரை அழைப்பார் ராஜா.. அந்த ப்ரீ வியு காட்சிகளைபார்த்து இவர் தனது கலாவல்லியில் படங்கள் பற்றிய விமர்சனகளை எழுதி வந்தார் . பைலட்பிரேம்நாத் திரைபடத்தில் நடிக்க இலங்கை வந்திருந்த சிவாஜி,மேஜர்,உட்பட அனைத்து நடிக நடிகர்களையும் திரு,கோவிலூர் செல்வராஜன் அவர்கள் நேர்காணல் செய்து கலாவல்லியில் பிரசுரித்தார்.இப்படி நன்றாகவே போய்க்கொண்டிருந்த பத்திரிகைத்துறை 1977ல் ஆட்சி மாற்றத்தின் பின் பின்னடைவைசந்தித்தது. காரணம் தமிழ்நாட்டு பத்திரிகைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டன.தடை நீக்கப்பட்டது. மீண்டும் குமுதம்,ஆனந்தவிகடன்,கல்கி போன்ற வார சஞ்சிகைகள் நமது நாட்டில்கோலோச்ச தொடங்கின. இவர்களது சஞ்சிகைகளின் விற்பனை பெரிதாக பாதிக்கப்பட்டது. நாளடைவில்இவர்கள் சஞ்சிகைகள் வெளியிடுவதை நிறுத்தவேண்டி வந்தது. ஆனால் ஒரு வழியை அடைத்தால்ஆண்டவர் இன்னொரு வழியை திறப்பார் என்பதுபோல் ,இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்நிகழ்ச்சித்தயாரிப்பு உதவியாளர் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.  அதற்கு செல்வராஜன் அவர்கள் விண்ணப்பித்தார்,.அந்தக் காலத்தில் இலகுவாக அந்த பதவிகள் கிடைக்க மாட்டாது. அதுவும் கிழக்குமாகாணத்தில்இருந்து அங்கு செல்வது மிகக் கடினம். தகுதி இருந்தாலும் அரசியல் செல்வாக்கு தேவை. நல்லவேளையாக செல்வராஜன் அவர்களுக்கு அன்று அமைச்சராக இருந்த பொத்துவில் எம்பி அப்துல் மஜீத் அவர்களின் நட்பு இருந்தது.தகுதியின் அடிப்படையில்,அவரின் பரிந்துரையும் கிடைக்க அந்த பதவி கிடைத்தது.அது இவருக்கு பெரிய கொண்டாட்டம். இவரின் தாய்வீடான இலங்கை வானொலிக்குள் சென்ற பின்னால்தன்னை ஒரு பல்துறைக் கலைஞனாக ஆக்கிக்கொண்டார்., முன்பு பத்திரிகை ஆசிரியராக இருந்த இவர் , பின்னர் ஒலிபரப்பாளராக, எழுத்தாளராக, கவிஞராக,பாடலாசிரியராக, பாடகராக, நடிகராக, இசையமைப்பாளராகஎன்று பல பரிமாணங்களில் தன்னை பரிணமிக்க செய்தார். முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அவதரித்து முத்தமிழ்வளர்த்த மண்ணில் பிறந்தவர் என்ற உரிமையுடன் இவரின் ஆரம்பகால எழுத்துகள் முத்தமிழையும்தழுவி நின்றதைஇவரின் படைப்புகள் சொல்கின்றன.சரி இனி, நாட்டின் அசாதாரண சூழல் காரணமாக இவர் 1989 ம் ஆண்டு சுயவிருப்பத்தில் இவர் பதவியிலிருந்துவிடுபட்டு,புலம்பெயர்ந்து நோர்வே நாட்டுக்குச் சென்றார்..வளமான மேற்கு ஐரோப்பியநாடு நோர்வே. இருந்தும்பிறந்த மண்ணும்,புகுந்த மண்ணும் எத்தனையோ விசயங்களிலும்,விதங்களிலும் வேறுபட்டும்,மாறுபட்டும்இருப்பதை உணர்ந்தாரிவர்.பழைய கற்பனைகளுக்கும்,புதிய அனுபவங்களுக்குமிடையில் பாரிய முரண்பாடுகள்இருப்பதை உணர்ந்தார். சமூகப் பிரக்ஜைகளும்,புதிய சமூக அக்கறைகளும் இவர் மனசை அலைக்களிப்பதைஉணரலானார் . முரண்பாட்டு மோதல்களுக்கு மத்தியில் இவர் பேனா உறங்கிக் கிடந்தது.புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் படைப்புகளையும், அந்த படைப்புகளின் ஆன்மாவையும் கூர்ந்து அவதானித்தார.ஈழ மண்ணின் அழிபாடுகளும்,அவலங்களும் அவர்களைப் பாதிக்கின்றன.தாய்நாட்டின் ஏக்கம் அவர்களின்நெஞ்சங்களிலே நிரம்பி வழிகின்றது.புதிய வளங்களைக் கண்டு திசைமாறிப் போய்விட்ட தமிழர்களின்செயல்கள் அவர்களுக்கு ஆத்திரம் ஊட்டுகின்றன. போலியான மேலோட்டமான வாழ்க்கைக்கும்,தமிழர்தம்யதார்த்த தேடலுக்கும் இடையிலான போராட்டங்கள் அவர்களின் எழுத்துக்களில் பிரதானம் பெற்றதைஇவர் உணர்ந்தார் . இந்த பதிவுகள் புலம்பெயர்ந்த தமிழ் படைப்பாளிகளுக்கு ஓர் இலக்கிய கௌரவத்தையும்அங்கீகாரத்தையும் கொடுப்பதாக அறிந்துகொண்டார்..இந்த தெளிவுடன் இவர் மீண்டும் எழுதத் தொடங்கினார் .இவருள் ஏற்பட்டது மீள் பிறப்பு. பல கதைக் களங்களை தெரிவு செய்து சிறுகதைகள் எழுதினார் .அவற்றில் ஒன்பது சிறுகதைகளை தெரிவு செய்து “விடியாத இரவுகள்” என்ற தலைப்புக் கொடுத்துசென்னையில் இயங்கிய மித்ர பதிப்பகத்துக்கு அனுப்பினார் . ஒரு தாய் தன் முதல் குழந்தையை பிரசவிக்கஎவ்வளவு வலி பொறுப்பாளோ அவ்வளவு வலி இவர் பெற்றிருக்கிறார்.. ஈழத்து எழுத்து பிரமாக்களுள்ஓர்மம்மிக்க படைப்பாளி அமரர் எஸ்பொ அவர்கள்.  அன்று, அந்த மகா படைப்பாளிதான் இவரின் முதல் நூலை அச்சு வாகனத்தில்ஏற்றினார். கோவிலூர் செல்வராஜனின் முதல் நூல் பிரசவமாகியது . அதற்கு பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் அணிந்துரைவழங்கினார். ஐரோப்பாவில் பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. நல்ல வரவேற்பும்,பாராட்டும் பெற்றது.இவரின் முதல் நூலை மறைந்த இவரது அப்பா இராசையா அவர்களுக்கு சமர்ப்பணம் செய்தார்.. கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால்விடியாத இரவுகள் நூல் இவரது முதல் நூலாக இருந்தாலும் அது தமிழ்நாட்டு லில்லி தேவசிகாமணி விருதைஇவருக்கு பெற்றுக் கொடுத்தது . இந்த விருது பெற்ற முதல் ஈழத்து எழுத்தாளர் என்ற பெருமையையும்இவரது முதல் நூல் இவருக்கு அளித்தது.இன்று இவருக்கு    எத்தனையோ விருதுகள் கிடைத்தாலும்,  அந்த முதலாவதுவிருது,அதுவும் இவரது முதல் நூல் பெற்றுத் தந்த விருதை இவரால் மறக்கவே முடியாதுதானே .இவர் இலங்கையில் இருந்தபொழுது அம்பாறை மாவட்டத்தின் தென்கோடியில் அமைந் திருக்கும் உகந்தை மலை முருகன் கோவிலுக்கு பத்துப் பாடல்கள் கொண்ட இசை அல்பம் ஒன்றை வெளியிட்டார். அதுதான் இலங்கையில் தனிப்பட்ட ஒரு கோவிலுக்காக பாடப்பட்ட முதலாவது பக்திப் பாடல்கள் அல்பம்.  இதில் உள்ள எட்டுப் பாடல்கள் மறைந்த,திருக்கோவில் திருஞனவாணி முத்தமிழ் மன்ற ஸ்தாபகர் சங்கீத பூசனம் திரு.சி.கணபதிப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்டவை.மீதி இரண்டும் கோவிலூர் செல்வராஜன் எழுதியவை.கோவில்களில் அந்தக் காலத்தில் இந்திய பாடகர்களின் இந்தியக் கோவில்கள் பற்றிய பாடல்களை கேட்ட மக்களுக்கு முதன்முதலாக தங்கள் கோவில்பற்றிய பாடல்களைக் கேட்டதும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள் அந்த இசை அல்பத்தில் திரு.கோவிலூர் செல்வராஜன் அவர்களுடன் மறைந்த இலங்கையின் இசைக் குயில் ராணி ஜோசெப் அவர்களும் எஸ். கணேஸ்வரன் அவர்களும் பாடி இருக்கின்றார்கள். அதன் பின் திரு,கோவிலூர் செல்வராஜனும் அவரது மைத்துனர் இரா.தெய்வராஜனும் சேர்ந்து திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள அனைத்துக் கோவில்களுக்கும் பக்திப் பாடல்கள் பாடி வெளியிட்டு இருக்கின்றார்கள்.அவை இன்று அனைத்துக் கோவில்களிலும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன.திரு.கோவிலூர் செல்வராஜன் அவர்கள் புலம்பெயர்ந்த பின்னர் 1999ம் ஆண்டு “தேசத்தின் தென்றல்” என்ற ஒரு இசை அல்பத்தை ஐரோப்பிய நாடுகளில் வெளியிட்டார்.அது தாயக உணர்வுப் பாடல்களாக அமைந்தது.முழுப் பாடல்களையும் கோவிலூர் அவர்களே எழுதி இருந்தார், இவருடன் பின்னணிப் பாடகி பி.எஸ்.சசிரேகா அவர்கள் இணைந்து நான்கு பாடல்கள் பாடியுள்ளார்.ஐரோப்பிய வானொலிகளும்,கனடா,அவுஸ்த்ரேலியா நாடுகளில் உள்ள வானொலிகளிலும் அது அன்று மிக விருப்போடு ஒலித்துக் கொண்டிருந்தது.இன்றும் ஒலிக்கின்றன.  அதில் ஒரு பாடல் இவரும் ,சசிரேகா வும் பாடியது “என்னை மறந்து நீங்க பறந்த தென்ன ராசா” என்றபாடல் காட்சிப் படுத்தி முகநூலில் இணைத்தவுடன் ஒரு வாரத்தில் ஐந்து இலட்சம் பேர் பார்த்து சாதனை ஏற்படுத்தினார்கள்.   இவரது நூல்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டு இருக்கின்றன.இங்கு இலங்கையிலும்,ஐரோப்பிய நாடுகள்,கனடா ஆகிய இடங்களிலும் அவை அறிமுகம் செய்யப்படுகின்றன. வருடத்துக்கு ஒரு நூல் இவர் இப்பொழுது வெளியிடுகின்றார். இவரதுநூல்களில் நாவல்,சிறுகதை,கட்டுரை,கவிதை,மெல்லிசைப் பாடல்கள் என்று பல களங்களைபார்க்கமுடிகின்றது.இவருக்கு பல நாடுகள் பல விருதுகளைக் கொடுத்திருக்கின்றன.மதிப்பளிப்புகள்——————————————மென்னிசைக் கவிஞர் -ஜெர்மனி தமிழ் மன்றம் (1994)தந்தை செல்வா விருது -உலகத் தமிழ் பேரவை(1996)லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது.   தமிழ் நாடு (1997)வெள்ளிவிழா கலைஞர் விருது நோர்வே தமிழ்மக்கள் இணைவுகூடம் (1999)முத்தமிழ் வாருதி –    உதயசூரியன் கலாமன்றம்.திருக்கோவில்(2000)முத்தமிழ் காவலர் .-லண்டன் தமிழினிவிருது  (2008)கவிதைக் காவியர் -லண்டன் ஸ்கைடோன்கிறிஸ்தவ இணையம் (2012)திருவூர்க் கவிராயர் -கனடா கிழக்கிலங்கை தமிழர்  (2013)கனடா உதயன் சர்வதேச பல்துறைக் கலைஞர் விருது வழங்கப்பட்டது.(2017)வாழ்நாள் சாதனையாளர் விருது அக்கினிக்குஞ்சு அவுஸ்த்ரேலியா (2019)வாழ்நாள் சாதனையாளர் விருது சர்வதேச கிராமியக் கலை விருது தமிழ்நாடு (2022)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.