உலக சாதனையில் இடம் பெற்ற ஈஷா மையத்தின் ஆதியோகி சிலை…

சிக்கபல்லாபூரில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்த ஆதியோகி சிலை, உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

சிக்கபல்லாபூர் அருகே உள்ள அவலகுர்கியில் ஈஷா அறக்கட்டளை சார்பில் 112 அடி உயர ஆதியோகி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை நேற்று முன்தினம் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்.

இந்த சிலை, கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ளது போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. திறப்பு விழாவைத் தொடர்ந்து 112 அடி உயர ஆதியோகியின் மீது ‘ஆதியோகி திவ்ய தரிசனம்’ என்ற பெயரில் 14 நிமிட ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சி நடந்தது.

ஆதியோகியின் திருவுருவத்தை ஏராளமானோர் கண்டுகளித்தனர். இங்கு கடந்த ஆண்டு அக்டோபர் 9ல், சத்குரு ஜக்கி வாசுதேவ் நாக பிரதிஷ்டை செய்திருந்தார்.

ஆதியோகிக்கு மஹா மங்களாரதி நடனம், கேரளாவை சேர்ந்த தேயம் பென்கி நடனம், ஜக்கி வாசுதேவ் மகளின் பரதநாட்டியம் என அனைத்தும் பார்வையாளர்களை கவர்ந்தது. உலகின் மிகப்பெரிய மார்பளவு சிற்பமாக கின்னஸ் உலக சாதனையாகவும் இந்த சிலை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button