இந்தியாவின் புனித மேரி தேவாலயத்தின் மீது தாக்குதல்!
இந்தியாவின் கர்னாடாவில் அமைந்துள்ள மிகப் பிரதான கிறிஸ்தவ வழிபாட்டு தலமான புனித மேரி தேவாலயத்தினுல் நுளைந்த மர்ம கும்பலொன்று பாரிய தாக்குதலினை நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பொது அங்கிருந்த குழந்தை யேசுவின் சிலை உடைக்கப்பட்டுள்ளதுடன் வழிபாட்டுதலத்தில் இருந்த பல பொருட்களும் அடித்து சேதமாக்கப்பட்டு இருந்ததாக பொலிஸிசார் தெரிவித்தனர்.
குறித்த தேவாலயத்தில் நான்கு காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளதாகவும் கிறிஸ்மஸ் தின நிகழ்வு காரணமாக அதிகமான காணிக்கைகளை மக்கள் போடுவதனால், இதனை இலக்காக கொன்டு வந்த கும்பல் அதில் ஒரு உண்டியலினை எடுத்துள்ளதாகவும் மிகுதி மூன்றையும் எடுக்க முடியாத காரணத்தினால் கோபத்தில் குறித்த தேவாலயத்தினை உடைத்து சேதப்படுத்தி இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இவ் மர்ம கும்பலைத் தேடி பொலிஸார் தீவிர விசாரணையினை மேற்கொன்டுள்ளனர்.
![]()