எடப்பாடியை ஆதரிப்பவருக்கு வீடு வாடகைக்கு கிடையாது … தமிழ் நடிகர் மாட்டிய போர்டு!
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களுக்கு வீடு வாடகைக்கு கிடையாது என தமிழ் நடிகர் ஒருவர் தனது வீட்டின் முன் போர்டு மாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
எடப்பாடி பழனிச்சாமி தவழ்ந்து சென்று ஆட்சியை பிடித்தார் என்றும் அதன்பிறகு அந்த ஆட்சி தன்னுடையது என இருந்தார் என்றும் அதேபோல் வீடு வாடகைக்கு வருபவர்கள் தவழ்ந்து வந்து வீடு கேட்கிறார்கள் என்றும், பின்னர் வாடகைக்கு விட்ட பின்னர் என்னையே யார் என்று கேட்கிறார்கள் என்றும் அதனால் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிப்பவருக்கு வீடு கிடையாது என்றும் தமிழ் துணை நடிகர் ஐசக் பாண்டியன் என்பவர் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த விளக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் குடிகாரர்கள் மற்றும் வட மாநிலத்தவர்களுக்கு வீடு வாடகை கிடையாது என்று அவர் அறிவித்துள்ளார்.
![]()