சமத்துவக் கட்சியின் வன்னி தலைமை அலவலகம் வவுனியாவில் திறப்பு!
சமத்துவக் கட்சியின் வன்னி தலைமை அலுவலகம் 28 . 12 . 2022 அன்று வவுனியாவில்திறந்து வைக்கப்பட்டுள்ளது.
![]()
வவுனியா நகரில் சென்ற் அன்ரனி ஒழுங்கை, கந்தசுவாமி கோவில் வீதியில்1454/1 முகவரியில் குறித்த அலுவலகம் 28 . 12 . 2022 அன்று காலை திறந்து வைக்கப்பட்டது.சமத்துவக் கட்சியின் தவிசாளர் சு. மனோகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பெயர் பலகையினை கட்சியின் தவிசாளர் திரை நீக்கம் செய்து வைக்க,அலவலகத்தினை கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்மு. சந்திரகுமார் நாடாவை வெட்டி திறந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்றஉறுப்பினர் வினோநோகராதலிங்கம், வவுனியா தெற்கு பிரதேச சபையின் தவிசாளர்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர், தமிழர் ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் சுகு சிறிதரன் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்நடராஜன்,கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், மத்திய குழுஉறுப்பினர்கள், அமைப்பாளர், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
![]()
![]()
![]()
![]()
![]()