ஆரியகுளம் தனியார் ஆதனமாம்!

யாழ்ப்பாணம் நாகவிகாரைக்கு அண்மையில் அமைந்துள்ள ஆரியகுளத்தின் வளாகத்தில் இன்று காலை முதல் இனந்தெரியாத நபர்களால் காட்சிப்படுத்தப்பட்ட பதாகையொன்றினால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

சிறுவர் முதல் பெரியோர்கள் வரை பொழுதுபோக்கும் இடமாக காணப்படும் ஆரியகுள வளாகத்தில் இன்று காலை அறிவித்தல் பதாகையொன்று நாட்டப்பட்டு அதில் தனியார் ஆதனம் அத்துமீறி பிரவேசிப்பவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றையதினம் திடீரென நாட்டப்பட்ட குறித்த அறிவித்தல் பதாகையினை கண்ணுற்ற ஆரியகுளத்திற்கு செல்பவர்களுக்கு குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது வரை குறித்த சம்பவம் தொடர்பில் யாழ் மாநகர முதல்வரோ மாநகர சபை தரப்பினரோ எவ்விதமான பதில்களையும் வழங்கவில்லை.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button