காற்பந்து ஆட்டக்காரர்களின் மூளையினுடைய ஆரோக்கியம் 65 வயதுக்குப் பிறகு குறையக்கூடும் – ஆய்வுத் தகவல்

காற்பந்து ஆட்டக்காரர்களின் மூளையினுடைய ஆரோக்கியம் 65 வயதுக்குப் பிறகு அதே வயதில் உள்ள மற்றவர்களைக் காட்டிலும் மோசமாகக்கூடும் என ஆய்வொன்று கூறுகிறது.

கிழக்கு இங்கிலாந்தில் East Anglia பல்கலைக்கழகத்தில் SCORES எனும் திட்டத்தின் கீழ் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தனிநபர்களின் அறிவாற்றல் செயல்பாட்டை மதிப்பிடுவதற்கும் மூளை ஆரோக்கியம் குறைவதைக் கண்காணிப்பதற்கும் இணையம் வழி அது நடத்தப்பட்டது.

ஆய்வில் கிறிஸ்டல் பேலஸ் (Crystal Palace) முன்னாள் ஆட்டக்காரர் மார்க் ப்ரைட் (Mark Bright) உள்ளிட்ட 145 தொழில்முறை காற்பந்து ஆட்டக்காரர்கள் பங்கேற்றனர்.

40இலிருந்து 50 வயதுக்குட்பட்ட காற்பந்து வீரர்கள் மற்றவர்களைவிட மதிப்பீடுகளில் சிறப்பாகச் செயல்பட்டாலும் வயதாகும்போது அவர்களின் ஆற்றல் மாறுபடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

வயதாகும்போது, காற்பந்து வீரர்கள் ஒத்த வயதினரைக் காட்டிலும் நரம்பியல் பாதிப்புகளால் மரணமடையும் சாத்தியம் மூன்றரை மடங்கு அதிகம் என்றும் ஆய்வில் தெரியவந்தது.

ஆய்வின் வழி, அடிக்கடி தலையால் பந்தை முட்டுவதால் (heading) ஏற்படக்கூடிய நீண்டகாலப் பக்கவிளைவுகளின் தொடர்பில் காற்பந்து ஆட்டக்கார்களுக்குச் சிறந்த பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

ஆய்வில் 65 வயதிற்கும் மேற்பட்டவர்கள் எதிர்வினை நேரம், நிர்வாகச் செயல்பாடு உள்ளிடவற்றை மதிப்பிடும்போது மோசமாகச் செயல்பட்டனர். இவை மூளை ஆரோக்கியம் மோசமடைவதற்கான ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் என்றும் தெரிவிக்கப்பட்து.

ஆய்வில் பங்கேற்ற காற்பந்து வீரர்களை வாழ்நாள் முழுதும் பின்தொடரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னாள் பெண் காற்பந்து விளையாட்டாளர்களிடம் இருந்து அதிகமான தரவுகளைச் சேகரிக்கவும் முயற்சி எடுக்கப்படுகிறது. ஆண் விளையாட்டாளர்களைக் காட்டிலும் பெண்களுக்கு முதுமை மறதி ஆபத்து அதிகம் இருக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்திருப்பதே அதற்குக் காரணம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button