கவிதைகள்

வண்ணமங்கையவள் வண்ணத்துப் பூச்சியல்ல!… ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

வண்ணத்துப் பூச்சியொன்று

சிறகடித்து சிங்காரமாய் பறந்து வந்ததுபூவின்மீது வந்து அமர்ந்நதுஅப்பூவின் கவர்ச்சியால் வந்து அமர்ந்ததாபூவில் தேன்குடிக்க அமர்ந்ததாபூவில் தேனீ மட்டுமே தேன்குடிக்கும்அது தேனியின் இயல்பன்றோவண்ணத்துப்பூச்சி அப்படியல்லஅது கவர்நந்திழுக்கப் பட்டேபூவில் அமர்கிறதென்றால் மறுப்பாரோஅமர்ந்த வண்ணத்துப் பூச்சிபூவுடன் இணைந்து உறவாடியதுஇறகுகளை படபடவென அடித்ததுஅழகு காட்டி பூவோடு ஐக்கியமானதுசிறிது நேரமே அந்த உறவுசிறகடித்து பறந்து சென்றதுஎங்கு செல்கிறதெனப் பார்த்தால்மற்றொரு மலர்மேல் அமர்ந்து களிக்கிறதுஎன் மனம் மட்டும் துன்பத்தில் துடிக்கிறதுவண்ணத்துப் பூச்சியாய் வட்டமிட்டாள்வளைந்து வந்துமென்னை முத்தமிட்டாள்தொலைந்தின்று எங்கோ சென்றுவிட்டாள்தொல்லைதரு துக்கமதை நான் தொலைக்கதொடுவானாய் எண்ணங்கள் மறுக்கின்றனதோகையவள் வண்ணத்துப் பூச்சியல்லபூவையவள் வேறுமலர் நாடிச் செல்ல!-சங்கர சுப்பிரமணியன்.

Loading