சங்கமம்

அதீத குறட்டையும் ஆபத்துக்களும்..!

தூங்கும்போது விட்டுவிட்டு குறட்டை விடுவது உடல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறட்டை எதனால் வருகிறது, இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுமென விரிவாகப் பார்ப்போம்.

1. உடற்பருமனானவர்களுக்கு கழுத்துப் பகுதியில் சதை அதிகமாக வளர்ந்து இருப்பதால் தொண்டையில் உள்ள சுவாச குழாய் சதையால் அழுத்தப்படும். இதனால் மூச்சுக்காற்றை உள் இழுக்கும்போது குழாய் அடைப்பால் தடை ஏற்படும். இதனால் குறைட்டை ஒலி கேட்கும்.

2. மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் அதிகமாக மது குடித்தால் வயிற்று ஒவ்வாமை காரணமாக விக்கல் மற்றும் குறட்டை உண்டாகும்.

3. செரிமானமாக அதிக நேரம் பிடிக்கும் நார்ச்சத்துள்ள, கொழுப்பு நிறைந்த அல்லது மசாலா உணவுகளை இரவில் சாப்பிட்டு தூங்குபவர்களுக்கு வாயு வெளியீடு, குறைட்டை ஏற்படும்.

4. குறட்டை விடும்போது உடலுக்குத் தேவையான அளவு ஆக்ஸிஜன் சுவாசம் மூலம் கிடைக்காது. இதனால் போதுமான தூக்கம் வராது. அடிக்கடி குறட்டை சத்தமே அவர்களை எழுப்பி விட்டுவிடும்.

5. பெரும்பாலானோர் மல்லாந்து படுத்து வாய் வழியாக தொடர்ந்து மூச்சை இழுத்து விடும்போது குறட்டை உண்டாகும். இதனால் அடிக்கடி நாக்கு, தொண்டை உலர்ந்து நடுநிசியில் தண்ணீர் தாகம் ஏற்படும்.

6. நெற்றி மேடு மற்றும் மூக்கின் பக்கவாட்டில் உள்ள சைனஸ் பைகளில் பாதிப்பு ஏற்படும்போது குறட்டை ஏற்படும்.

7. புகைப்பிடிப்பவர்களுக்கு குறைட்டை தொல்லை ஏற்படும்.

8. அடிக்கடி ஜலதோஷம் ஏற்படுபவர்களுக்கு குறட்டை வரும்.

9. தூக்க மாத்திரை உள்ளிட்ட தேவையற்ற வாய்வழி மாத்திரைகளை அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு குறட்டை உண்டாகும்.

10. உடல் எடையை கட்டுக்குள் வைத்து, பக்கவாட்டில் திரும்பி படுத்து தூங்குபவர்கள் இப்பிரச்னையில் இருந்து விடுபடுகின்றனர். மது, புகை, கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பவர்களுக்கும் குறைட்டை தொல்லை இருக்காது.

Loading