குளிக்கும் போது சிறுநீர் கழிப்பவரா நீங்கள்?…. இதனை தெரிந்துகொள்ளுங்கள்!
சரியான இடைவெளியில் சிறுநீர் கழிப்பது என்பது மிகவும் ஆரோக்கியமான ஒரு செயல் ஆகும். குளிக்கும் போது சிலருக்கு சிறுநீர் கழிக்கும் பழக்கம் உண்டு. அது சரியா தவறா என தெரியாது. ஆனாலும் ஒரு சிலர் இயற்கையாகவே இந்த பழக்கத்தை கொண்டிருப்பார்கள். நின்றுகொண்டே சிறுநீர் கழிப்பதால் அதிக பலன் உள்ளது. இதன் மூலம் 27% நீர் சேமிக்கப்படுவதாக அமெரிக்காவில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை அறிவித்துள்ளது.
குளிக்கும் பொது சிறுநீர் கழிப்பதால் நாம் பயன்படுத்தும் தண்ணீர் குறைகிறது கால்களில் எதாவது அடிப்பட்டு இருந்தால், அல்லது சிறு கீறல்கள் இருந்தால், சிறுநீர் கழிக்கும் போது, அதன் மீது படுவதால், விரைவில் குணமாகும்.
சிறுநீரில் உள்ள யூரியா, சரும அழகை பாதுகாக்கும் வல்லமை படைத்தது. பொதுவாகவே பாதங்களில் உள்ள பூஞ்சை தொற்றுகளை எளிதில் சரி செய்யும். அத்லெட்டுகளும் தங்கள் பாதங்களில் உள்ள பூஞ்சைகளை அகற்ற யூரின் தெரப்பி என்ற முறையில் சிறுநீரில் பாதங்களை முக்கி சுத்தம் செய்கின்றனர்.
ஆனால் இதற்கு எந்தவித ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை. சுற்றுசூழல்படி பார்க்கும் போது, குளிக்கும்போதே சிறுநீர் கழிப்பதால் தண்ணீர் மிச்சமாகிறது. அதைக் கழுவ ஃபிளஷ் செய்ய கூடுதல் நீரும் தேவைப்படாது. உலக நாடுகளில் தண்ணீர் தட்டுப்பாட்டின் போது இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துவார்கள்.