வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கிய கனடா வாழ் குப்பிளான் உறவுகள்!
யாழ்பாணம் குப்பிளானை பூர்வீகமாகவும் கனடாவை வசிப்பிடமாக கொண்ட அமரர் பறுவதம் குமாரசாமி (முன்னாள் ஆசிரியர் – குப்பிழான் விக்கினேஸ்வரா ம.வி) அவர்களின் 31 ஆவது நினைவு நாளில் அவரது பிள்ளைகளால் வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
தலா இரண்டாயிரம் ரூபா பெறுமதியான 64 உலர் உணவுப்பொதிகள், 64 காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து அனைத்து தாய்மார்களுக்கும் மதிய நேர உணவும் பரிமாறப்பட்டது.
கொரோனா பேரிடர் காலத்தில் உலருணவுப் பொதிகளை வழங்கிய அமரர் பறுவதம் குமாரசாமி அம்மாவின் பிள்ளைகளுக்கு நன்றியறிதலை தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
1362 நாட்கள் கடந்தும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதிகேட்டு தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கும் தாய்மார்களுக்கு இவ்வாறான உதவிகள் நிச்சயம் பலம் சேர்க்கும்.