முச்சந்தி

கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து யாழ்.ரயில் நிலையம் வரை சகோதரத்துவ பயணம்!

சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து யாழ்.ரயில் நிலையம் வரை சகோதரத்துவ பயணம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து நாளை காலை 06,40 மணிக்கு பயணம் ஆரம்பமாகி, மாலை 2 மணியளவில் யாழ்ப்பாணத்தை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.

சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு சோஷலிசம் இளைஞர் சங்கம், யாழ் தேவி புகையிரதத்தில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

குறித்த பயணத்தில் குருநாகல் புகையிரத நிலையத்தில் நூல்களும், வழங்கும் நிகழ்வு இடம்பெறும். அதுபோன்று அநுராதபுர புகையிரத நிலையத்திலும் , நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புகையிரதம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்ததும், யாழ்ப்பாண புகையிரத நிலைய நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் இருந்து ரிம்பர் மண்டபம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ளப்படும். அங்கு கலாசார நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மறுநாள் வியாழக்கிழமை எழுவைதீவுக்கு பயணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு 200 பனங்கன்று நடுகை செய்யப்படவுள்ளதுடன், எழுவைதீவு பாடசாலைக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள், மற்றும் தீவின் இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

Loading

One Comment

  1. நல்லதே நடக்கட்டும்.இளந்தலைமுறையினர் இலங்கையில் இனங்கள் சகோதரர்களாக வாழும் காலத்தை உருவாக்கட்டம்.

    பனங்கன்று நடும் செயல்திட்டத்தை வாழ்த்துகிறோம்.பனம் பொருட்கள் இலங்கையில் வணிகப் பொருளாக மாறி இலங்கையின் பெகாருளாதாரத்தையும் அனைவருக்கமான பொருளாதார மே;மபாட்டைக் கொடுக்க வாழ்த்தகிறோம்.இந்த முயற்சியைப் பாராட்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button